VIRAL VIDEO: ரஷ்மிக்கா மந்தனா - வருண் தவான்வின் அரபிக்குத்து.. கடற்கரையில் அவர்கள் செய்த குறும்பு.

150 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் இன்னும் அரபிக் குத்துவின் காய்ச்சல் யாரையும் விட்டபாடில்லை. இன்று தாழ்தி விஜய் பான்ஸ் ராடாரில் சிக்கியிருப்பது ரஷ்மிக்கா மண்டன்னாவும், பாலிவுட் நடிகர் வருண் தவானும் தான்.
ரஷ்மிக்காவும், வருணும் ஷூட்டிங் நடத்திக்கொண்டுள்ளனர். அது படமா அல்லது எதாவது விளம்பரமா என்று இன்னும் தெரியவில்லை. அதைப்பற்றி இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.
ஷூட்டிங்கின் நடுவே இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியிரும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங். ஏற்கனவே இந்த பாடலுக்கு addict ஆனதாக வருண் தவான் சமீபத்தில் நடந்த interview ஒன்றில் சைகை மூலம் சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஷ்மிக்கா கூடிய விரைவில் பாலிவுட்டில் தன காலடி எடுத்து வைக்கிறார். தற்போது அமிதாப் பச்சனுடன் குட் பை படம், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் “மிசன் மஜ்னு” ஆகிய படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.
மேலும் ராஷ்மிகா தான் தளபதி 66 படத்தின் நாயகி என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது.
வைரல் வீடியோ: