பிக்பாக்கெட் அடித்து போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய பிரபல நடிகை

மேற்குவங்க தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரூபா தத்தா. இவர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா வந்தார்.
அந்த புத்தக கண் காட்சியில் பிக் பாக்கெட் அடித்து போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது, புத்தக கண்காட்சியின் ஓரத்தில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டியில் ஒரு பெண் தன் கையில் இருந்த கைப்பையினை தூக்கி வீசுவதை கண்டு சந்தேகம் அடைத்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்தனர்.
அவர் தூக்கி எறிந்த கைப்பையில் பல பணப்பைகள் இருந்தன. அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் மேற்குவங்க தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வரும் ரூபா தத்தா என தெரிய வந்தது.
அவர் புத்தக கண்காட்சி வருவோரிடம் கைவரிசை காட்டி பணப்பையை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் திருடிய 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே ரூபா தத்தா சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் (இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன்) மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்து சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
ஆளை பார்த்து எடை போட கூடாது என்பார்களே அது இதுதான் போல என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் பேசி வருகின்றனர்.