'போரை முதலில் நிறுத்துங்க': உக்ரைனுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் இறங்கிய ரஷ்யர்கள்..கைது செய்த ரஷ்ய காவல்துறை..!!

Russia Ukriane War Onprogress

மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 8வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

Russia Ukriane War Onprogress

போர் எதிர்ப்புப் போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ளதாக ரஷ்ய போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போருக்கு எதிரான பதாகைகளை வைத்திருந்த போராட்டக்காரர்கள் ரஷிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கடந்த வியாழன் முதல் இதுவரை 7,615 பேர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

View all