2 கோடி கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை..? - சசிகலா, இளவரசி நேரில் ஆஜர் - முழு விவரம்!!

Sasikala Ilavarasi Case Update

சொத்துகுவிப்பு வழக்கில் பரப்பன அக்ராஹார சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் இருவரும் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பரப்பன அக்ராஹார சிறைதுறையின் DIG ஆக இருந்த ரூபா, கடந்த 2018ம் ஆண்டு சசிகலா சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில் அவருக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி வழங்கியதாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதன் அடிப்படியில் மாநில அரசு ஒரு குழு அமைத்து விசாரணையை தொடங்கியது. மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவும் லஞ்சம் வழங்கப்பட்டதை உறுதி செய்த நிலையில், ஊழல் துறை போலீசார் விசாரணை செய்ய கர்நாடகா அரசு உத்தரவிட்டிருந்தது.

இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி கண்காணிப்பாளர்களாக இருந்த ஏழு பேரும் நேரில் ஆஜர் ஆகினர்.

விசாரணைக்கு பிறகு,

சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு.

Related Posts

View all