சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி.. ஓபிஎஸ் முன்பே சூளுரை..!

சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி.. ஓபிஎஸ் முன்பே சூளுரை..!
தற்போது இருக்கும் அதிமுகவிற்கு தினம் தினம் உட்கட்சியிலுருந்தே வரும் செய்திகள் தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சசிகலாவை கட்சியில் இணைத்தால் தான் மீண்டு அதிமுக பழைய நிலைமைக்கு வரும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் தொண்டர்கள் மனநிலைமையும் கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தேனியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக செயலாளர் சயீத் கான் பேசும்போது, ‘அதிமுகவின் கோட்டை எனச்சொல்லப்படும் ஆண்டிபட்டி தொகுதியில் கட்சி தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீள சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் இத தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் கூறியது இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.