இறங்கி வந்த கலெக்டர் மகள்.. காவலருக்கு அளித்த அன்பு பரிசு.. நெகிழ்ச்சி சம்பவம்..!

சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பு பகுதியில்நிறைய IT நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் Peak hours நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும்.
இதனால் அப்பகுதியில் கடைக்கு வரும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதற்குள் ஒருவழி ஆகி விடுகின்றனர்.
அப்படிப்பட்ட முக்கியமான பகுதியில் traffic சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் 44 வயதான சாலமன் சதீஷ்.

சாலமன் சதீஷ் எப்போதும் சுறுசுறுப்பாக தனது பணியை மிகுந்த உற்சாகத்துடனும், வாகன ஓட்டிகளிடம் வர நடந்து கொள்ளும் விதம் அனைத்தையும் அவ்வழியே தினம் பள்ளிக்கு சென்று வரும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனின் மகள் மோனா மிர்தண்யா கவனித்து வந்துள்ளார்.

அந்த குட்டி போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி, அவருக்கு டைரி ஒன்றினை பரிசாகவும் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.