VIDEO: மீண்டும் வேலுமணி வீட்டில் ரெய்டு.. அதிமுகவினருக்கு டிபன், லன்ச் ரெடி!

Spvelumani Raid

மீண்டும் வேலுமணி வீட்டில் ரெய்டு.. அதிமுகவினருக்கு டிபன், லன்ச் ரெடி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்களுக்கு சுடச்சுட டீ விநியோகம்.

வருமானத்திற்கு அதிகமாக ₹58.23 கோடி (3928%) சொத்துக்குவிப்பு செய்ததாக வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கோவை, சேலம், சென்னை, நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் ரிப்போர்ட்படி , வேலுமணி 2019ம் ஆண்டில் மட்டும் 3 முறை சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு மொத்தமாக 14 நாட்கள் தங்கியுள்ளார்.

அதே போல, இங்கிலாந்து, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, என பல நாடுகளுக்கு சென்று தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. மொத்தமாக, 32 நாள்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

இதன் சந்தேகம் காரணமாக அவர் வெளிநாட்டிலும் முறைகேடான பணத்தின் மூலம் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கலாம் என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.

மேலும் கோவையில் SPVக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துவரும் நிலையில், கிருஷ்ணா கல்விக்குழும தலைவர் மலர்விழி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

கோவை பாரதி காலனி சாலையில் காவல்துறை அதிகாரி அனிதா வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு. S.P.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் கோவை கூடுதல் SP ஆக பணியாற்றியவர் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புததுறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை.

Related Posts

View all