இன்று தமிழகத்தில் நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வுகள். கூடுகிறது அமைச்சரவை கூட்டம்!!

Today news higlights updates

இன்று தமிழகத்தில் நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றி ஒரு குட்டி அப்டேட்:

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது; ஆன்லைன் ரம்மி தடை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என தகவல்!

வள்ளியூர் - நாங்குநேரி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது; தெற்கு ரயில்வேயின் முதுநிலை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் தகவல்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 4 பேரின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை!

இந்திய ஒற்றுமை பயணத்தின் 19வது நாளை, கேரள மாநிலம் பாலக்கோட்டில் இருந்து தொடங்கினார் ராகுல் காந்தி!

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது; இந்த ஆண்டு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட, ₹36 கோடி நிதி ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு!

Related Posts

View all