ஈபிஎஸ் என் காரை எடுத்துக்கோங்க.. ஆனால் அங்க மட்டும் போய்டாதீங்க..!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில் தான் தவறுதலாக ஏறுகிறீர்கள்,
அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம் ; ஆனால் கமலாலயம் சென்றுவிட வேண்டாம் என்ற கூறிய உதயநிதியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை.
அதற்கு பதிலளிக்கும் வண்ணம்,
அதிமுகவின் பன்னீர்செல்வம் எழுந்து எங்கள் கார் எப்பொழுதும் எம்.ஜி.ஆர் மாளிகையை நோக்கியே செல்லும் என்று கூறினார்.
Backstory:
கடந்த வாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து வெளியில் வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி காரில் ஏற சென்றார்,
இருவரின் காரும் ஒரேய நிறம் என்பதால் ஏற்பட்ட இந்த குழப்பம், பின்பு சுதாரித்து அவர் காரில் ஏறி சென்றார்.
இந்த நிகழ்வை நினைவுகூர தான் இன்று உதயநிதி பேசியுள்ளார்.