விருது மேடையில் கண் கலங்கிய 90ஸ் கிட்ஸ் favourite அண்டர்டேக்கர்.. அவரின் பேச்சு.. வைரல் வீடியோ..!

The அண்டர்டேக்கர் - இந்த பேர் தெரியாத 90’s கிட்ஸ் இருக்கமாட்டார்கள். குத்துசண்டை WWE உயரிய விருதான HALL OF FAME அவருக்கு சென்ற வாரம் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்கு இவரை விட தகுதியான ஆள் வேறு யாராக இருக்க முடியும்?

அண்டர்டேக்கர் முதன்முறையாக அழுது உலகமே பார்த்த மேடை அது.
அவரின் பேசியது சில:
என்னுடைய உண்மையான பெயர் Mark Calawayன்னு இங்கு நிறைய பேருக்கு தெரியாது. வெள்ளரிக்காய பாத்தா கூட பயபடுற என்ன அண்டர்டேக்கராக மாத்தினது வின்ஸ் மேக்மகான்.

எனக்கு டாட்டூ குத்துறதே பிடிக்காது ஆனா கை முழுக்க டாட்டூ போட சொன்னவர் ட்ரிபிள் - H, அதான் அண்டர்டேக்கர் ஆகிய எனக்கு ஒரு அடையாளமா மாறுச்சு.
மேலும், 49 முறை எனக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கு. இந்த DeadManஅ பிழைக்க வச்ச என்னோட மருத்துவர்களுக்கு என் நன்றியை சொல்ல கடமை பட்டிருக்கேன்.

UNDERTAKERனா அது Paul Bearer தான்; நான் எப்படி நடக்கனும் பேசனும்னும்னு அண்டர்டேக்கரா உருவாக்கினது அவர் தான், இப்போ அவர் என்னோட இல்ல, என்னை DeadManன்னு அழைத்த என் நிறைய சக கலைஞர்கள் பலர் இப்போ என்னுடன் இல்லை.

ஒரு முக்கியமான ஆள் இருக்கான் என் தம்பி KANE என்னோட இத்தனை வருஷம் சகோதரனான,தோழனா, சக கலைஞனா என்னோட நின்றவன். அண்டர்டேக்கர்ல பாதி அவன்தான்.
UNDERTAKER ரோட WRESTLEMANIA history ல முக்கியமான மேச்ன்னா அது, நானும் SHAWN MICHAELSம் போட்ட சண்டதான். என்ன தோக்கடிக்கிற எல்லா வாய்ப்பும் SHAWNக்கு இருந்துச்சி என் வாழ்நாளில் மறக்க முடியாத மேச் அது.

என்ன சூப்பரா காமிச்ச எல்லா கேமராமேன், லைட்பாய்ஸ், சவுண்ட் technician என அனைவருக்கும் என்னோட நன்றிகள். இந்த 33 வருஷமா என்ன அண்டர்டேக்கரா ஏத்துக்கிட்ட என் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.

இனி என் குடும்பத்துக்காக குழந்தைகளுக்காகவும் நேரம் செலவிடனும்னு நினைக்குறான் இந்த MARK CALLOWAY.
இதை சொல்லி முடித்தவுடன் அண்டர்டேக்கர் கண் களஞ்சியத்தை பார்த்து, நிறைய ரசிகர்கள், சக குத்துசண்டை வீரர்கள் அனைவரும் கண் கலங்கினார்.
அந்த வைரல் வீடியோ:
What a moment!
— WWE (@WWE) April 2, 2022
The WWE Universe showers the legendary @undertaker with praise as #ThePhenom takes his rightful place in the #WWEHOF. #ThankYouTaker pic.twitter.com/o62a4PkYDP