எதே கோட்டிக்கார பயலே வா.. ஆனா கேக்க கேக்க சும்மா நச்சுன்னு இருக்கு. செம்ம குத்து கெளதம். வீடியோ வைரல்.
இந்த படத்தின் பெரும்பகுதி நான் அதிகம் பயணித்து சென்று வரும் ஊர் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த செண்பகத்தோப்பில் படமாக்கப்பட்டது!! படத்தின் வருகைக்காக காத்திருக்கிறோம்.
இந்த பாட்டில் கவனத்தீர்களா என்று தெரியவில்லை: 1.மீனாக்க்ஷி அம்மாவின் கணீர் குரல் 2.ஷான்- இன் அளவான, தேவையான இசை 3.அழகான வரிகள் இவை மொத்தமும் சேர்த்து நம்மை குதூகலப்படுத்தி பாடலை ரசிக்க வைக்கிறது மீண்டும் மீண்டும்.. குறிப்பாக “ஊருக்கே மாமியாரு கொடுமை” - அருமை.
இரைச்சல் மிகுந்த பாடல்கள் பல நடுவில் அளவாக இசை புரியும் விதமாக பாடல் வரிகள் வாழ்த்துக்கள் பாடல் உரு பெற காரணமாக அமைந்த அனைவருக்கும் நன்றி.
பொதுவாக இயக்குனர் முருகதாஸ் இயக்கும் படங்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பு தான் அவர் தயாரிக்கும் படங்களும் அதாவது பெருமையுடன் வழங்கும் படங்களுக்கும் இருக்கும். இந்த படகுக்கு அதுவே ஒரு பெரிய லேபிள். நிறைய ரசிகர்கள் வந்து படம் பார்ப்பதற்கு ஒரு ஊன்றுகோலாக அது தான் இருக்கப்போகிறது.
நடிகர் கெளதம்க்கு இந்த படம் கண்டிப்பா எதாவது பிரேக்கா அமையும் என்று எதிர்பார்க்கிறோம். அவருக்கு கண்டிப்பா ஒரு ப்ரொபேர் ஹிட் அவசியம். இந்த படம் அதை கொடுக்கும் என்று நம்புகிறோம்.
Video: