இதைத்தான் எதிர்பார்த்தோம். தமிழ் சினிமாவின் பெருமை. 400 கோடிகளை அள்ளியது பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் எல்லா இடங்களிலும் தியேட்டர் ஹவுஸ் ஃபுல். முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பிச்சென்றதை பார்க்க முடிந்தது. தளபதி, நாயகன் வரிசையில் பொன்னியின் செல்வன் மணிரத்னத்திற்கு அல்டிமேட் ஹிட் மூவி இது தான் என்று சொல்லலாம். அந்த படங்கள் பெரிய நாயகர்கள், இந்த படத்தில் இந்த தலைமுறை பெரிய நாயகர்களை ஒன்று கூட்டி ஒரு தரமான படம், இறுதியில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு நிறைவேறியது, தமிழ் மக்களின் அசையும் கூட.
தற்போது பொன்னியின் செல்வன் படம், 400 கோடிகளை கடந்துள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை. இந்த படம் தமிழில் மட்டும் 150 கோடிகளுக்கு மேல் கடந்து, சாதனை புரிந்துள்ளது. இன்னும் 10 கோடிகளை ஆளில்லா வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இன்று படத்தின் 12வது நாள், இன்னும் 15 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடலாம், மற்ற படங்கள் வரும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி விடுவார். இருந்தாலும் 250 கோடியில் படத்தை முடித்து, பாகம் ஒன்றிலேயே அந்த வசூலை தயாரிப்பாளருக்கு கொடுத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த படம் கொஞ்சம் பிசிறு தட்டியிருந்தாலும், அந்த நெகட்டிவ் வார்த்தைகள் இந்த படத்தை அப்படியே டம்மி செய்திருக்கும். ஆனால் நன்றாக எடுத்து மாஸ் காட்டிட்டாரு மணிரத்னம். மேலும் இந்த அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கண்டிப்பாக வெளிவந்தால் இன்னொரு 500 கோடி மினிமம் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது.
இப்போது Industry hit ஆவதற்கு அல்லது அந்த பட்டத்தை நெருங்குவதற்கு கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற காவியமோ multi-starrer-ஓ தேவைப்படுகிறது. இது எதுவுமே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து IH கொடுக்க, தன் சாதனையை தானே முறியடிக்க, ரஜினி என்ற மந்திரத்தால் மட்டுமே சாத்தியம் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து. அது உண்மை தானே.
Proof Tweet:
#PonniyinSelvan joins the ₹400 crores elite club on its 11th day. ALL TIME MEGA BLOCKBUSTER! pic.twitter.com/Yr38WzkzB6
— LetsCinema (@letscinema) October 10, 2022