கமலால ரஜினி மாதிரி சுலபமா ஆகிட முடியும். ஆனா, ரஜினியால கமல் மாதிரி ஒருபோதும் ஆக முடியாது. முழு விவரம்.

64 years of kamal haasan

ரஜினி கமல் ரசிகர்களின் சண்டையில் இருந்துஆரம்பிப்போம்:

கமலஹாசன் ஒரு சினிமாவுக்கு ‘தரம்’தான் முக்கியம்னு பிடிவாதமா நின்னதால அவரால ரஜினி போல பாக்ஸ் ஆபிஸ் வெற்றி தரமுடியலைதான்.ஆனா, அந்தப் பாதையும் எனக்கு சுலபமா வரும்னு காட்டின படம்தான் விக்ரம். கமலால ரஜினி மாதிரி சுலபமா ஆகிட முடியும். ஆனா, ரஜினியால கமல் மாதிரி ஒருபோதும் ஆக முடியாது.

Rajini Fan: ரஜினி இடத்துக்கு தான் இன்னிக்கும் போட்டி. அவரு யாரு இடத்துக்கும் போக வேண்டிய அவசியமில்ல.

தசாவதாரம் படத்துல பத்து கேரக்டருக்கும் தனி தனியா நடை, உடை, பாவனை, குரல் எல்லாம் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் ? விஸ்வரூபம் படத்துல கதகளி. இது மாதிரி கடின உழைப்பை தரவேண்டுமே !! அதுக்காக ரஜினியும் உழைக்காமல் இந்த இடத்துக்கு வரலை, கமல் உழைப்பு அதிகம்.

Rajini Fan: அடுத்த சூப்பர்ஸ்டார்னு தான் எல்லாரும் அலர்றானுக. அடுத்து உலகநாயகன்னு யாரும் பேசுறதில்லயே.

அடுத்த உலகநாயகன்ன்னு சொல்ற அளவுக்கு இங்க யாரும்மா இருக்கா முதல்ல..

64 years of kamal haasan

ரசிகர்களுக்கு கமலின் நன்றி ட்வீட்:

64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.

உங்கள் நான்

“எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக” - நேர்மையான அரசியலிலும் நீங்கள் தான் முன்னோடி என்பதையும் காலம் நினைவில் கொள்ளும்.

Related Posts

View all