அப்பாடா மீண்டும் தமிழில் அருவி அதிதி பாலன்.. செம்மயா இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Aditi next latest movie update

எது நல்ல படம் என்ற debate தான் இப்போ இணையத்தில் சூடு பிடித்து போயிட்டு இருக்கு. நல்ல படத்துக்கான வரையறை கொஞ்சம் சொல்லுங்களேன்.. எது நல்ல படம்.. அருவி மாதிரி வாழ்க்கையோட கருப்பு பக்கங்கள காட்டினா நல்ல படமா.. இருட்டுல எடுத்தா நல்ல படமா.. Rawஆ எடுத்தா நல்ல படமா.. இல்ல உங்களுக்கு புடிச்ச படம் மட்டுமே நல்ல படமா.. இதற்கு நீங்கள் கமெண்டில் பதில் சொல்லவும்.

அருவி படத்தை பற்றி எழுதியதால் நாம் கண்டிப்பாக நடிகை அதிதி பாலனை பற்றி பேசாமல் இருக்க முடியாது. முதல் படத்தில் அசுர நடிப்பை வெளிப்படுத்திய நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாகிட்ட இருக்கும் ஒரு கெட்ட விஷயம் என்றால் இவங்களை அப்டியே விட்ருவாங்க, பிற மொழிகளில் நடித்து அவங்க பேமஸ் ஆனதுக்கப்றம் மீண்டும் தமிழுக்கு கூட்டிட்டு வருவாங்க. அதுபோல தான் அதிதி பலனை இவ்வளவு நாள் மலையாள சினிமாவிடம் கொடுத்துவிட்டு, இப்போ மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி.

Aditi next latest movie update

பாரதிராஜாவின் உடல்நலம் சீராகி ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெறுகின்றன. இந்த படத்தில் விஜயின் தந்தை SAC, கெளதம் மேனனுடன் யோகி பாபுவும் நடிக்கிறார். நீண்ட நாள் கழித்து தங்கர் பச்சான் படம் இயக்குவதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காரணம் அவர் படங்கள் எப்படி இருக்கும் என்று அனைவர்க்கும் தெரியும்.

இங்கே சிக்கல் எல்லாம் இப்படித்தான் வாழ வேண்டும் என கொள்கை வகுத்து வாழ்பவர்களுக்குத்தான். எப்படியாவது வாழ்ந்தால் போதும் என நினைத்து எதையும் கண்டுகொள்ளாமல் வாழ்பவர்களுக்கு எதுவுமே சிக்கல் இல்லை. இது இயக்குனர் தங்கர் பச்சான் சமீபத்தில் போட்ட ட்வீட். ஒருவேளை இது தான் கதையாக இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

Related Posts

View all