அய்யோ ரியா என்ன இவ்வளவு க்யூட்டா இருக்காங்க கிளோஸ் அப்ல.ஏஜென்ட் கண்ணாயிரம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழில் டிடெக்ட்டிவ் ஆடம் எல்லாம் கடைசியா எப்போ வந்தது என்றே மறந்து போச்சு. அந்தளவு அப்படியொரு genre இருக்கிறது என்றே மறந்துட்டாங்க. இந்த கட்டுரை எழுதுறப்போ நியாபகம் வந்தவொரு படம் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிச்சு மெகா ஹிட்டான துப்பறிவாளன் படம். டிடெக்ட்டிவ் படம் என்றாலே த்ரிலுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்தடுத்து முடிச்சு அவிழ்வதில் இருக்கிறது சுவாரசியம்.
துப்பறிவாளன் படமே அப்படி தான் போகும், அந்த வகையில் தற்போது சந்தானம் இணைய இருக்கிறார். அவர் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் படம் இந்த வரம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோ தான் வேற லெவெலில் போயிட்டு இருக்கு. என்னதான் இது ஒரு படத்தின் ரீமேக்காக இருந்தாலும் சந்தனத்தை தவிர வேறு யாரும் இந்த கதைக்கு அவ்வளவு பொருத்தமா இருக்க மாட்டாங்க, காரணம் அந்த கதாபாத்திரம் அப்படி.
இந்த படம் பார்க்கிறவங்களுக்கு கண்டிப்பா ரொம்ப புதுசா இருக்கும் ச்ச இதையெல்லாம் வைத்து கூட பிசினஸ் பண்றாங்களா என்று கோவம் வரும். ஆனால் இப்படியொரு விஷத்தை வெளிச்சத்தில் போட்ட இந்த படக்குழுவினருக்கு மக்கள் நன்றி சொல்வாங்க ஏனெனில் இது மக்களின் எமோஷன் தான் இந்த படம். ஆனால் அந்த எமோஷன் கடைசியில் தான் வெளிய தெரியும். அந்த ட்விஸ்ட் வெளிவரும்போது உண்மையாகவே திரை தீ பிடிக்கும்.
ஏஜென்ட் அப்டின்னா பீஸ்ட், விக்ரம் படத்தில் வர்ற மாதிரி இல்ல. இது ஒரு தனி ரகம். பிரைவேட் டிடெக்ட்டிவ். லோக்கலான ஆளு. ஆனா கன்டென்ட் என்று பார்த்தல் விக்ரம், பீஸ்ட் படத்தை விட பெரிது என்று சொல்லலாம். ரொம்ப புதுசா இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு. சந்தானம் காமெடிய பண்ணுவாரு என்று நினைத்து போனால், காமெடி இருக்கும் ஆனால் டார்க். செம்மயா என்ஜாய் பண்ண போறீங்க.
Video: