வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு படம்.. பேரக் கேட்டா ஊரே திரளுது! யார் அந்த பேட்டைக்காளி? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Aha pettaikali video viral

ஜல்லிக்கட்டை பற்றி யாரு வேணாலும் படம் எடுக்கலாம், ஆனால் வெற்றிமாறன் எடுத்த தான் அதற்கான டிரீட்மென்ட் சரியாக இருக்கும் என்பது பல ரசிகர்களின் கருத்து. தற்போது ஆஹா OTT தளத்திற்காக வெற்றிமாறன் தயாரிப்பில் பேட்டைக்காளி வெப் சீரிஸ் தயாராகிட்டு இருக்கு, வரும் தீபாவளி அன்று ரிலீஸ்.

கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி & ஆஹா தமிழ் தயாரிப்பில் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் ல.ராஜ்குமார் எழுத்து இயக்கத்தில் திமிலோடு தமிழ் உணர்வோடு வறான் பார் பேட்டைக்காளி! யார் அந்த #பேட்டைக்காளி?

ஆனால் எங்களுக்கு தெரியும் யார் எந்த பேட்டைக்காளி என்று. இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்னாக கலையரசனும், ஷீலா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். கண்டிப்பாக கலையரசன் செய்யும் கதாபாத்திரத்தின் பெயரே பேட்டைக்காளியாக இருக்கும். லெஜெண்ட் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இந்த சீரிஸுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Aha pettaikali video viral

2018ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணனுக்கு ஜெய், அந்த படத்தில் தினேஷ், மகிமா முடித்திருப்பார். அந்த படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் இந்த சீரிஸுக்கும் இயக்குனர். இவர் இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video:

Related Posts

View all