லவ் பண்றீங்களா என்று ஐஸ்வர்யா லட்சுமியை தொந்தரவு செய்த பெண்கள்.. வெறுத்து போய் அவங்க செய்த சம்பவம் வைரல்.

Aish leskhmi arjun das in love

நேற்றைய முன்தினம் தமிழ் சினிமாவில் ஒரு பயங்கரமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அதாவது இப்போ தமிழ் சினிமாவின் crush யாரென்றால் பெண்களுக்கு அர்ஜுன் தாஸ், ஆண்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி. இவங்க இரண்டு பேர் தான் ட்ரெண்டிங். சம்பவம் என்னவென்றால் அர்ஜுன் தாசும், ஐஸ்வர்யா லட்சுமியும் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதற்குப்பின் தான் ரசிகர்கள்/ரசிகைகள் கொந்தளித்து விட்டனர்.

இப்போது தான் சமீபத்தில் கெளதம் கார்த்திக்கு கல்யாணம் ஆச்சு, அதற்கு முன் ஹரிஷ் கல்யாண்க்கு கல்யாணம் ஆச்சு. பெண்கள் crush லிஸ்டில் இருக்குக்கும் ஆயிடுச்சே என்று புலம்பி வந்தனர் பெண்கள். அதற்காக ஐஸ்வர்யா லட்சுமியின் DM-ல் எல்லாம் சென்று புலம்பியுள்ளனர். நீங்களும் அர்ஜுனும் காதலிக்கிறீங்களா என்று. இவங்களோட டாபிக் தான் இணையத்தில் வைரல்.

Aish leskhmi arjun das in love

ஆனால் பசங்க அப்படி பண்ணல, எதையும் தாங்கும் இதயம் ஆச்சே. அதனால் இதை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்தாங்க. நேற்று பல மெசேஜ் போயிருக்கும் போல ஐஸ்வர்யாக்கு அதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் அவங்களே ஒரு ஸ்டோரி வெச்சுட்டாங்க, நாங்க லவ் எல்லாம் பண்ணல அர்ஜுன் உங்களுக்கு தான் என்று, மேலும் நாங்க நண்பர்கள் என்று தான் சொல்லிருக்காங்க.

ஒரே நாளில் பசங்க பொண்ணுக இருவருமே புலம்புவது இது தான் முதல் தடவை. கட்டா குஸ்தி படத்துக்கு பின் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த படம் தான் அவங்களை தமிழ் நாட்டில் செம்ம தூக்கு தூக்கி வீட்டிற்கு. இவங்க நடிக்கும் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்திற்கு எல்லாம் இவங்க வரும் காட்சிகளுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Post:

Related Posts

View all