தமிழ் ரசிகர்களின் கிரஷ் ஆகிட்டாங்க. ஐஸ்வர்யா ஐஸ்வர்யான்னு சுத்திட்டு இருக்காங்க பசங்கள். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல அழகான அருமையான திரைப்படம் பார்த்த சந்தோசம். கட்டா குஸ்தி படம் முடிந்தும் மக்கள் இருக்கை விட்டு எழவில்லை. எழ மனமில்லை. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம் வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால் & ஐஸ்வர்யா லட்சுமி. இவ்வளவு நல்ல எமோஷன் எங்களால் ரெவியூவில் போடமுடியவில்லை. அதனால் இங்கு பதிவிட்டுக்கொள்கிறோம். இப்போ ஐஸ்வர்யா எல்லாருடைய crush ஆகிட்டாங்க. அவங்களுக்கு இந்த 2022 வருடம் ரொம்ப நல்லதா அமைஞ்சிருக்கு.
இப்போது இணையதளம் பூரா இவங்க போட்டோ தான் ட்ரெண்டிங். அதுவும் கட்டா குஸ்தி படத்தில் என்ன தான் மாடர்ன் பொண்ணு வேஷத்தில் ஆரம்பத்தில் வந்தாலும், பின்னர் அவங்க புடவையில் கொடுக்கும் என்ட்ரி தான் எல்லாரையும் கவர்ந்தது. அதுவும் இவ்வளவு ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் அதுவும் பெரிய ஹீரோ படத்தில் இதுவரை வந்ததில்லை. அதுக்கு space கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள்.
டேய் நா புடவையிலும் சூப்பரா இருப்பேன், மாடர்ன் ட்ரெஸ்ஸிலும் சூப்பரா இருப்பேன் என்று ஜாலியா ஒரு மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் நடித்திருக்காங்க. கருப்பு உடையில் அதுவும். அதுவும் அவங்க கலருக்கு பாக்க அவ்வளவு அருமையா இருக்கு. பொதுவா கருப்பு டிரஸ் போட்டாலே ஒரு மாதிரி மாசா தான் இருக்கும், அதுவும் இவங்க வேற இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கும் கதாநாயகி. அதனால் இவங்க என்ன பண்ணாலும் இப்போ ரசிச்சிட்டு இருக்காங்க.
கொஞ்ச நாட்களுக்கு முன் தான் கார்கி மேடையில் கண் கலங்கினாங்க. வாய்ப்புகள் பற்றி பேசுங்க. இப்போ பாருங்க அப்படியே எல்லாம் reverse ஆயிடுச்சு. இரண்டே மாதத்தில் அதுவும் பொன்னியின் செல்வன் பட ரிலீசுக்கு பின் அதிக படங்களில் நடித்து வெளியான படம் இவங்களுது தான். OTT, பெரியாத்திரை என்று எல்லாத்திலும் ரூலிங் என்று சொல்லலாம். ரொம்ப ஜாலியான படம் கட்டா குஸ்தி, பாருங்க இன்னும் பார்க்கவில்லை என்றால்.
Latest Photos: