பழுவூர் இளையராணி நந்தினி. ஐஸ்வர்யா ராய் போஸ்டரை ரிலீஸ் செய்த பொன்னியின் செல்வன் படக்குழு. லேட்டஸ்ட் அப்டேட்.
நேற்றைய முன்தினம் விக்ரம் as ஆதித்த கரிகாலன், நேற்று கார்த்தி as வல்லவரையன் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்ட்ர்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இன்று பொன்னியின் செல்வனின் மிக முக்கியமான கதாபத்திரம் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி வைரல். நந்தினியாக ஐஸ்வர்யா ராய்.
நந்தினி, அவள் கொடும் பண்புகளால் நரகத்துக்கு அழைத்துச் சென்று, அதையே சொர்க்கம் என்று சாதிப்பாள். இந்த கதாபாத்திரத்தை இவங்க எப்படி செஞ்சிருப்பாங்க என்று நினைக்கும் போதே படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எண்ண தோணுகிறது.
மற்றுமொரு தகவல்:
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினமே ரஜினிக்கு பிடித்த நூல். அதில் வரும் நந்தினி தேவி கதாபாத்திரம் ரஜினியை கவர்ந்திருக்கிறது. படையப்பாவின் தொடக்கம் நந்தினி தேவியிலிருந்துதான் ஆரம்பித்தது.
இந்த வாரம் பூரா பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். இன்னும் திரிஷா, ஜெயம் ரவி லுக் எல்லாம் லோடிங்.
Viral Look: