ஐஸ்வர்யா ராஜேஷ்னால தான் இப்படியொரு சம்பவம் பண்ண முடியும். டிரைவர் ஜமுனா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லாம். எந்த ரோல் இருந்தாலும் அசால்ட்டா எடுத்து என்னால பண்ண முடியும் என்று துணிவுடன் நடிக்கும் ஒரு கதாநாயகி. தமிழ் சினிமாவில் இப்போ இருக்கும் கதாநாயகளில் நிறைய female சென்ட்ரிக் படம் செஞ்ச ஒரே கதான்யாகி என்றால் இவங்க தான். இது தான் ரோல் என்று சொல்லிட்டா போதும், சம்பவம் பண்ணிடுவாங்க.
இந்த டிரைவர் ஜமுனா படத்தின் ஸ்னீக் பீக் சமீபத்தில் வெளியானது. ரொம்ப நல்லா இருந்தது. இந்த படம் பையா படம் போன்று ட்ராவல் தான் படம் என்று நினைக்கிறோம். ஐஸ்வர்யா வந்து ஒரு கார் ஓட்டுநர், சந்தேகப்படக்கூடிய ஆட்கள் வந்து காரில் ஏறிவிடுறாங்க. அதற்குப்பின் என்ன ஆச்சு என்பது தான் கதை போல.
படம் கதைக்குள் சென்றவுடன் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நினைக்கிறோம். ஏனென்றால் இது போன்ற படங்களில் எல்லாம் அந்த த்ரில் மொமெண்ட்ஸ் ஒர்கவுட் ஆனால் தான் மொத படமும் ஒர்கவுட் ஆகும். ஆனால் ஸ்னீக் பீக் பார்ப்பதற்கு செம்ம த்ரிலிங்கா இருக்கு. படமும் இப்படியே நகர்ந்தாள் நன்றாக இருக்கும்.
இதுவரை இரண்டு ஸ்னீக் பீக் விட்ருக்காங்க, பார்ப்பதற்கு இரண்டுமே அடுத்தடுத்து வரும் காட்சிகள் போல தெரிகிறது. நமக்கு என்ன தெரியவேண்டும் என்றால் இந்த ட்ராப்பில் இருந்து ஐஸ்வர்யா எப்படி தப்பிக்க போறாங்க என்பதில் இருக்கிறது திகில். போலீஸ் கிட்ட டாக்டர் மாதிரி பேசுறது நல்லா இருக்கு. ஆனால் லௌட் ஸ்பீக்கர் enable ஆச்சு பாருங்க, அங்க தான் இருக்கு சம்பவம்.
Video: