என்னடா இப்படி ஒரு டைட்டில் வெச்சுருக்கீங்க.. இது மட்டும் உண்மையா இருந்தா.. புலப்பும் அஜித் ரசிகர்கள்.

Ajith ak61 title update

தமிழ் சினிமாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் லிஸ்டில் இவர் படம் இல்லை என்றால் தான் ஆச்சர்யம். ஆம் AK 61 படத்தை பற்றி தான் பேசுகிறோம். அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக குதூகலமாக இருந்து வருகின்றனர், காரணம் அஜித்தின் பைக் ஓட்டும் புகைப்படங்கள் தினம் தினம் நிறைய வந்து மகிழ்ச்சி படுத்தியது. அதற்கு அஜித்துடன் பயணம் செய்த சுப்ரஜ் என்பவரை தான் பாராட்ட வேண்டும்.

என்னதான் அஜித் ரசிகர்கள் ஜாலியாக இருந்தாலும், அவர்கள் தீபாவளி போல கொண்டாட அவங்களுக்கு படத்தின் அப்டேட் எப்பொழுதும் போல கிடைக்கவில்லை. எல்லா நடிகர்களின் பிறந்தநாள் அல்லது எதாவது ஒரு occasion வரும்பொழுது, கண்டிப்பாக படக்குழுவினரிடமிருந்து எதாவது அப்டேட் வரும். ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் அது எப்போதுமே கிடைப்பதில்லை, அவர்களுக்கு பழக்கமாகி விட்டது.

ஆனால் யாருக்கும் கிடைக்காத ஒரு வரம் அஜித் ரசிகர்களுக்கு உண்டு. எப்போது அப்டேட் வருமென்றே தெரியாது, திடீரெண்டு விட்டு விடுவர். அதற்குப்பிறகு இரண்டு நாட்களுக்கு சமூக வலைத்தளங்களை குத்தகைக்கு எடுத்து விடுவர். இது தான் சமீப காலமாக நடந்து வருவது.

தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் இனிமையான செய்தி என்னவென்றால், படத்தின் டைட்டில் நாளை அல்லது வியக்கிழமை வெளியாகவுள்ளது. இதற்காக தான் தவமாய் தவமிருந்தனர். ஆனால் நமக்கு கிடைத்த தகவல்படி “துணிவு” அல்லது “துணிவே துணை” தான் இந்த படத்தின் டைட்டில் என்று சொல்லப்படுகிறது. எப்போதுமே catchy தலைப்புகளை விரும்பும் அஜித், இத தான் ஒருமனதாக தேர்ந்தெடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Ajith ak61 title update

வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எச்.வினோத்தின் குறி இந்த தடவை மிஸ் ஆகாது என்று செல்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

Related Posts

View all