செம்ம fun மூடில் இருக்காரு.. அஜித்தோட அந்த வாய்ஸ்.. இந்த வீடியோ பாத்துட்டே இருக்கனும் போல தோணுதே.. வீடியோ வைரல்.
தல அஜித் அவர்கள் இப்போ AK 61 படத்தில் கிடைத்த விடுப்பு நேரத்தை பைக் ரைட் செய்து செலவழித்து வருகிறார். சமீப காலமாய் தமிழ்நாடு பசங்க லே, லடாக் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதுவும் பைக்கில், ஒரு சிலர் நடந்து, லிப்ட் கேட்டு லே லடாக் சென்றதை நாம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பார்த்தோம்.
பசங்களுக்கு இப்போ பைக்கின் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கும் என்பது நாம் அறிவோம். இந்த தலைமுறை பைக் ride என்றால் போதும் அவங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. சாப்பிட கூட மறந்துவிடுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து லடாக் செல்லும் பசங்க அதிகம்.
எந்த சீசனில் சென்றாலும் அங்கு கண்டிப்பாக தமிழர்களை காணலாம். அப்படி தான் அஜித் தற்போது பைக் ride சென்று லடாக் செல்லும் போது பசங்க கண்ணில் தென்பட்டுள்ளார். அஜித் கண்ணில் பட்டால் சும்மா விடுவார்களா? உடனே அவரிடம் போய் புகைப்படம் எடுத்து பேசியுள்ளனர்.
அப்போது பசங்க அவர் கிட்ட, ‘உங்களை மூன்று நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறோம்’ என்று கூற அதற்கு அஜித் ‘எது மூணு நாளா தேடறீங்களா.. நா என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா’ என்று fun செய்துள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
இந்த விடியோவை அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, விஜய் ரசிகர்களும் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் வீடியோ:
#AK Voice ❤️😍 pic.twitter.com/P8KuqtH9Aa
— Ayyappan (@Ayyappan_1504) September 16, 2022