அஜித் ரேஸ் ஓட்டி சாம்பியன் எல்லாம் ஒன்னும் ஆகல.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ajith car championship alisha abdulla video

தல அஜித்துக்கு கார்/பைக் ஓடுவது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது ஊர் அறிந்த விஷயம். அவர் நடிகர் என்பதை விட ரேசர் என்பதையே விரும்புவார். இந்தியாக்காக பங்குபெற்று எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எப்போதுமே இருக்கும். தற்போது பைக்/கார் ரேஸிங் விட்டுவிட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலிஷா அப்துல்லா இந்தியாவின் pride. இவங்க பல சாம்பியன்ஷிப்கள் வென்று சாதனை புரிந்தவங்க. அதுமட்டுமல்லாமல் பெண்கள் பிரிவில் இந்தியாவை ரெப்ரெசென்ட் செய்த முதல் ரேசர் இவங்க தான். பல பெருமைகள் இவருக்கு உண்டு. தற்போது பிஜேபி கட்சியில் இவர் இணைத்துள்ளது கொஞ்சம் சர்ச்சையை கிளம்பினாலும், அது அவரவர் விருப்பம். அதனால் இவர் தாக்கப்பட்டாலும், அதாவது இவர் எடுத்த முடிவு பற்றி விமர்சிக்க யாருக்கும் இடம் இல்லை. அது அவங்க பர்சனல்.

தற்போது இவங்க சமீபத்தில் கொடுத்த இன்டெர்வியூ ஒன்றில் அஜித் பற்றி பேசியது, அஜித் ரசிகர்களை கொஞ்சம் காயப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் உண்மையை பளிச் என்று பேசிவிட்டார். ஏன்தான் அஜித் சூப்பரா கார் ஓட்டுபவரா இருந்தாலும் இந்த துறையில் அலிஷாதான் சீனியர்.

நெறியாளர் முக்தர் கொஞ்சம் கேள்விகளை ட்விஸ்ட் செய்து கேட்டாலும்,ரொம்ப அமைதியாகவே பதில் கூறியுள்ளார். அஜித் இதுவரை எந்த சாம்பியன்ஷிப் வெல்ல வில்லை என்பது ஒன்று. அவர் லண்டனில் ஒரு போட்டியில் பங்குபெற்று 3ம் இடம் பெற்றார். ஆனால் முதல் இடம் பெற்றாலே சாம்பியன்ஷிப். அதனால் வர சொல்வது உண்மை.

இதில் அஜித் ரசிகர்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, ஜெயிக்கிறோமோ தோக்கிறோமோ என்பது முக்கியமில்லை. கடைசி வரை சண்டை செய்கிறோமா,இல்லையா என்பது தான் முக்கியம்.

Video:

Related Posts

View all