அஜித் இறங்கி செம்ம முரட்டு குத்து குத்திருக்காரு. மின்னல் வேக டான்ஸ். சில்லா சில்லா வீடியோ வைரல்.

Ajith chilla chilla video viral

ஒரு வழியா பெரிய இடைவெளிக்கு பின் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாட்டு ரிலீஸ் ஆகியிருக்கு. எப்படி இந்த பாட்டு மற்ற அஜித் பாடுகள் போல resonate பண்ணுமோ அதே மாதிரி தான் இந்த பாடும். அவருடைய வாழ்கை தத்துவங்களை பாடலாக கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பாடல். இந்த பாட்டு அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் திரையில் பார்க்கும்போது.

அண்ணாத்தே படத்தில் ஒரு வசனம் வரும்: நாடி நரம்பு முறுக்க முறுக்க 🥵 ரத்தம் மொத்தம் கொதிக்கக் கொதிக்க 💥 அரங்கம் முழுக்க தெறிக்கத் தெறிக்க 😎 தொடங்குது ஒரு சிறப்பான தரமான சம்பவம் 💯
இந்த படத்துக்கு இந்த பாட்டு அப்டி ஒரு மூட் செட் பண்ணிருக்கு. அஜித் ரசிகர்கள் சில்லா தில்லா இனி வெளிய வரலாம், பாட்டு எப்படியும் செம்ம ஹிட் ஆயிடுச்சு ஏற்கனவே.

Ajith chilla chilla video viral

உடனே இந்த பாட்டு தளபதி விஜயின் வாரிசு படம் பாடல் ரஞ்சிதமே அல்லது தீ தளபதி விட சூப்பரா இருக்கான்னு கேட்டா, அதற்கு விடை இல்லை. ஆனால் இதுவரை ரிலீசான மூன்று பாடல்களுமே தரம், தனித்துவம். இதுவரை அஜித் ரசிகர்களுக்கு இப்படி ஒரு வீடியோ எடிட் செய்து மாஸா சிங்கிள் ரிலீஸ் ஆனதில்லை. இப்போ ஆகியிருக்கு. இன்னைக்கு அவங்களோட டே, சோசியல் மீடியா பூரா அவங்களோட கண்ட்ரோலில் வந்திருக்கும் இந்நேரம்.

பொங்கலுக்கு செம்ம விருந்து காத்திருக்கு இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும். கண்டிப்பா இரண்டு படங்களும் ஹிட் ஆனால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இருவருமே ஜெயித்தால் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப நல்ல விஷயம். பொங்கலே அதிரடியா ஆரம்பிக்கப்போகுது. சரியாக படம் பண்ணினால் இவர்களின் அடுத்தபடம் அதாவது தளபதி 67, விக்னேஷ் சிவன் இயக்கும் படம் கூட தீபாவளிக்கு ரிலீஸ் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.

Video:

Related Posts

View all