அஜித் தான் மாஸ் என்று காட்ட பித்தலாட்டம் செய்த அஜித் ரசிகர்கள்.. கலைக்கும் விஜய் ரசிகர்கள். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
வாரிசு மற்றும் துணிவு படங்கள் வரும் பொங்கல் 2023 அன்று ரிலீஸ் அவதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் தினம் தினம் சண்டை செய்கிறார்கள், எதாவது கன்டென்ட் தினமும் சிக்கிக்கொள்கிறது. இவர்கள் இருவருக்கும் இருக்கும் போட்டியே இவங்க இரண்டு பேரில் யார் நம்பர் 1 என்று. அதனால் எப்படியாவது நம்முடைய தலைவரை நம்பர் 1 ஆகிவிட வேண்டும் இதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.
எப்போதுமே விஜய் படங்களின் அப்டேட் அப்போப்போ அவங்களுக்கு சரியாக வந்துவிடும், ஆனால் அஜித் படத்தின் அப்டேட் அப்படியில்லை. ஆனால் திடீரெண்டு வந்து அனைவரையும் surprise பண்ணும். காலகாலமாக இது தான் நடந்து வருகிறது. விஜயின் முதல் லுக் எல்லாம் ரிலீஸ் ஆனால் அசால்ட்டாக ஒரு லட்சம் லைக்குகளை யார் முதலில் போடுகிறார்களோ, அந்த IDக்கு அவ்வளவு ரீச் வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது என்ன பிரச்னை என்றால், எலன் மஸ்க் எப்போ த்விட்டேர் வாங்கினாரா, அப்போது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக யாரெல்லாம் பேக் id வெச்சிருக்காங்களோ, யாரெல்லாம் போட்ஸ் யூஸ் பண்றாங்களோ அவங்க IDயை எல்லாம் டெலீட் செய்து வருகிறார். இது எங்கு பிரச்னை ஏற்படுத்திருக்கு என்றால், துணிவு முதல் பார்வை வந்தபோது அனைவரும் அந்த லுக்கை லைக் செய்து 1 லட்சம் லைக்குகள் கொண்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.
ஆனால் இப்போது அது குறைந்து குறைந்து 77 ஆயிரமாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் idக்கள் போட்களாக பயன்படுத்தியுள்ளனர் அஜித் ரசிகர்கள். இதை இப்படி லைக் குறைவதை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு நல்ல ஒரு கன்டென்ட் மாட்டியிருப்பதால் நேற்று முதல் அந்த புகைப்படத்தை போட்டு தங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் செய்வதறியாது அஜித் ரசிகர்கள் விழி பிதுங்கி இருக்கின்றனர்.