யாரம்மா நீ? என்னடா இது துணிவு படத்துக்கு வந்த சோதனை.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று தான் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் சாந்தசோமாக உள்ளனர். ஏனென்றால் அஜித் 61வது படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் வெளியானது, படத்துக்கு துணிவு என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். நல்ல பவர்புல்லான டைட்டில் தான். நேற்று காலையிலேயே நாங்கள் ரிப்போர்ட் செய்திருந்தோம், கண்டிப்பாக தலைப்பு துணிவு அல்லது துணிவே துணையாக தான் இருக்கும் என்று.
உலக பிரச்சனைகள் சீக்கிரம் முடிவுக்கு வந்தாலும் இந்த அஜித் -விஜய் ரசிகர்களின் சண்டை முடிவுக்கு வராது. டேய் ரெண்டு பெரிய ஆட்கள் தான் விடுங்க என்று சொன்னாலும் விடமாட்டாங்க. அடிச்சு தான் காட்டுவோம் என்று இறங்கி விடுவது வழக்கம். துணிவு தான் டைட்டில் என்று தெரிந்தவுடன் எப்படியோ இணையதளம் முழுவதும் தேடி, ‘துணிவு’ என்று 2020ம் ஆண்டே ஒரு படம் வந்திருக்கு என்று அந்த போஸ்டரை நிமிடத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளனர்.
துணிவு படத்தின் போஸ்டருடன் அந்த போஸ்டரும் இணையத்தில் வைரல். அந்த படம் இன்று வரை வெளியானதை என்ற trace கூட இல்லை. இந்நேரம் வெளியாகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த படத்துக்கு 10 பைசா செலவில்லாமல் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு என்று சொல்லலாம்.
இன்று வேற இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இன்று என்ன செய்ய காத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை.