BGM போடு.. BGM போடு.. தீபாவளிக்கு கிடைச்சிடுகிச்சு நம்ம தல தரிசனம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தல அஜித் நடிக்கும் துணிவு படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என்று முடிவாகிவிட்டது. கிட்டத்தட்ட விஜய்-அஜித் படங்கள் இரண்டுமே ஒரே நாளில் ரிலீசாகி 9 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இந்த படம் இரண்டுக்கும் பயங்கர hype இருக்கும். இருவரும் முன்னணி நடிகர்கள் தற்போது தமிழ்நாட்டில். ரசிகர்கள் அடிதடிக்கு பஞ்சம் இருக்காது. யாருக்கும் எந்த அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்று வேண்டுகிறோம்.
தற்போது இரண்டு படத்தின் ஷூட்டிங்கும் முடிவு பெரும் நிலையில் உள்ளது. வாரிசு படத்தின் கடைசி பேட்ச் ஒர்க்ஸ் நடந்து வருகிறது. வலிமை படத்தின் பேட்ச் ஒர்க்ஸ் போன வாரம் அஜித் இல்லாமல் நடந்து வந்தது, இன்று EVP film சிட்டியில் கடைசிகட்ட பேட்ச் ஒர்க்ஸ் அஜித்தை வைத்து எடுத்து வருகின்றனர். அப்போது அஜித் இருக்கிறார் என்று தெரிந்துகொண்ட ரசிகர்கள் அங்கு சென்றனர். அவர் கேரவன்க்கு வெளியில் வந்து கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோ இணையத்தில் வைரல்.
தீபாவளிக்கு என்னடா விஜய்-அஜித் படம் வரல, தீபாவளி தீபாவளி மாதிரியே இல்லை என்று சொல்லிவந்த ரசிகர்களுக்கு, அஜித்தின் இந்த கிலிம்ப்ஸ் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.
ஆனால் தளபதி விஜய் ரசிகர்களுக்கு தான் எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. வாரிசு சிங்கிள் வரும் என்று சொல்லி வந்தனர், ஆனால் அதன் அப்டேட் கூட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. அதனால் இணையத்தில் #WeAwaitsForVarisuUpdate 💥 என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதை அஜித் ரசிகர்கள் கலாய்த்து என்ஜாய் பண்ணி வருகின்றனர். ஏனென்றால் அவங்களுக்கு தான் அஜித் கிலிம்ப்ஸ் கிடைத்து விட்டதே.
Video:
Latest video Of #Ajith sir From #Thunivu shooting spot.#NoGutsNoGlory #Ajithkumar pic.twitter.com/QowEGAM8WX
— அல்வா சிட்டி அஜித் பேன்ஸ் திருநெல்வேலி (@AjithFcTvl) October 21, 2022