என்னடா பாட்டு இது.. வசனமே புரியல அப்படிங்கிற மாதிரி இருக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தல அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முக்கியமான பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடல் தான் அஜித்துக்கு ஓப்பனிங் சாங் என்று சொல்லப்படுகிறது. மேலும் சில சில பாட்டு படத்தின் நடுவில் தான் வரும் போல, பின்னர் காசேதான் கடவுளடா பாட்டு கடைசியில் climax எல்லாம் முடிச்சுட்டு எண்டு கிரேடிட்ஸ்சுடன் வரும் என்று சொல்லப்படுகிறது.
சரி இப்போ பாட்டு எப்படி இருக்கு என்று பார்ப்போமா: பொதுவாக அஜித் ரசிகர்களே அஜித் படத்தில் பாட்டு அவ்வளவு நன்றாக இருக்கும் என்று எப்போதுமே சொல்லமாட்டாங்க. ஏனென்றால் பாடல்கள் எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த உண்மை. ஆனால் இந்த படத்தில் முதலில் வெளியான சில்லா சில்லா பாடல், அடுத்து வெளியான பாடல் எல்லாமே நன்றாக தான் இருந்தது.
இந்த காங்ஸ்ட்டா பாடலில் என்ன பிரச்சனை என்றால் பாட்டே கேட்கல முதலில். பாடல் வரிகளை விட அந்த பாட்டுக்கு பீட்ஸ் சத்தம் அதிகமாக கேட்கிறது. ஜிப்ரான் ஏன் அதை அப்படி ரெக்கார்ட் பண்ணார் என்று தெரியவில்லை. ஜிப்ரானை பொறுத்தவரை பின்னணி இசையில் பயங்கரமா மிரட்டுவார். ஆனால் பாட்டெல்லாம் பெருசா எதிர்பார்க்கமுடியாது. படத்துடன் பார்க்கும்போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
பாடல் எல்லாம் இருக்கட்டும் இனி ரசிகர்கள் எதிர்பார்ப்பது டீசர் ட்ரைலர் தான். கண்டிப்பாக இரண்டு தரப்பும் மாஸாக ட்ரைலர் எடிட் பண்ணி ரிலீஸ் செய்வாங்க, அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாரம் இந்த இரண்டு படத்துக்கும் முக்கியமான வாரம். எப்படியும் பாடல்கள் எல்லாம் ஒரு வழியா முடிஞ்சிருச்சு. இனி தான் சம்பவமே. இதை வைத்து தான் படத்துக்கு கூட்டம் வரும்.
Video: