10 வருடம் கழிச்சு தல அஜித் இன்டெர்வியூ குடுக்குறார்.. பண்டிகையை கொண்டாடுங்கள்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சினிமாக்கு அப்பாற்பட்டு தல அஜித் என்றாலே ஒரு பயங்கரமான பிரைவேட்டான ஆளு. அவர் அவரின் குடும்பம் என்று தான் இருப்பார். பெரிதாகி அவரை வெளியே பார்க்கமுடியாது. படத்தில் நடிப்பார், எப்போதாவது வெளியில் பார்க்கும் போது ரசிகர்களுடன் அதுவும் அரிதாக போட்டோஷூட்டு. அவர் சொந்த படத்திற்கு கூட விழா எல்லாம் வைத்து பழக்கம் இல்லை.
ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரே வருடத்தில் இவ்வளவு அஜித் புகைப்படங்கள் வெளிவந்தது இது தான் முதன்முறையும் கூட. அதுவும் அவர் ஆல் இந்தியா டூர், உலக பயணம் என்று சென்றதால், அதுவும் அவருடன் பயணித்த சுப்ரஜ் என்றவர் பகிர்ந்தால்.இல்லையென்றால் இதுவும் ரசிகர்களுக்கு கிடைத்திருக்காது.
சமீபத்தில் அவர் லடாக் சென்றிருந்தார், கூடவே துணிவு பட நடிகையான மஞ்சு வாரியரையும் அழைத்து சென்றிருந்தார். இதுவரை அஜித்துடன் நடித்த கதாநாயகிகளில் மஞ்சுக்கு மட்டும் கிடைத்த கௌரவம். ஏனென்றால் அவர் பிரைவேட்டாக செல்லும்பொழுது யாரையும் அழைத்து சென்று பார்த்ததில்லை அவரின் நண்பர்கள் தவிர.
வரும் அக்டோபர் 15ம் தேதி இந்த இன்டர்வீவ் ஆனந்த விகடனில் வெளியாக இருக்கிறது. அந்த பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் விற்பனை செய்து சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அஜித் பேன்ஸ் செம்ம குஷி அண்ணாச்சி.