கல்யாணம் எதுக்கு! குழந்தை போதும்! 51 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ள துடிக்கும் அஜித் பட நடிகை
![Ajith kumar new tabu kandukondain kandukondain](/images/2022/09/08/tabu.jpeg)
“எனக்கும் எல்லோரையும் போலவும் தாயாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அதற்காக திருமணம் தான் செய்து கொள்ள வேண்டுமா?” தமிழ் நடிகை ஒருவர் இப்படி ஒரு பரபரப்பான ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கிறார்.
![Ajith kumar new tabu kandukondain kandukondain](/images/2022/09/08/ajith-kumar-new-tabu-kandukondain-kandukondain.jpeg)
வழக்கமாகவே நடிகைகள் பலர் இள வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருகப்பர். சிலர் 40 வயதை நெருங்கியும் திருமணம் பற்றி யோசிக்காமல் தனது சினிமா கேரியரில் மற்றுமே கவனம் செலுத்தி வருவர்.. சிலர் திருமணம், நிச்சயதார்த்தம் வரை சென்றும் கூட கைகூடாமல் இருக்கின்றனர். ஒரு சில நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் சினிமாவில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து கொள்வர். தமிழில் அஜித்குமார் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் மோகன்லால் உடன் சிறைச்சாலை என பல திரைப்படத்தில் நடித்தவர் நடிகை தபு. பாலிவூடில் 80 களிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். 50 வயது ஆகியும் தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
![Ajith kumar new tabu kandukondain kandukondain](/images/2022/09/08/ajith-kumar-new-tabu-kandukondain-kandukondain44.jpeg)
தற்போது ஒரு பேட்டியில் பேசிய தபு, தனக்கும் எல்லோரையும் போல தாயாக ஆசை உள்ளது எனவும், ஆனால் அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், வாடகை தாயின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளது எனவும் கூறியுள்ளார்.