கண் கலங்கிட்டாங்க.. கல்யாண நாள் வேற.. அஜித்தை சந்தித்த அந்த நெகிழ்ச்சியான தருணம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தல அஜித் ஒரு வழியா ஒரு வருடத்திற்கு பின் அவரோட துணிவு லுக் மாற்றி விட்டார். பழைய என்னை அறிந்தால் லுக்ல இப்போ காட்சியளிக்கிறார். எப்போடா இது மாதிரி லுக்கில் இருப்பார் வருவார் என்று ஏங்கி வந்த ரசிகர்களுக்கு நேற்று அந்த இன்ப அதிர்ச்சி கிடைத்தது. பழைய மாதிரி தாடி எல்லாம் shave பண்ணிட்டு சாக்லேட் பாய் லுக்க்கு மாறிவிட்டார். அதுவும் ஹாலிவுட் நடிகர் போல இருக்கிறார்.
அஜித் தற்போது இந்த படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவனுடன் ஒரு லைட் ஹார்டெட் படம் பண்ணுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு. விக்னேஷ் சிவன் இதுவரை எடுத்த படங்களில் பெரிய அளவு violence இருந்ததில்லை, அஜித் இதுவரை நடித்த படங்களில் கடந்த பாத்து வருடமாக நேர்கொண்ட பார்வை படத்தை தவிர எல்லாமே மாஸ் படம் தான். விக்னேஷ் சிவன் உடனான படம் கண்டிப்பா வித்தியாசமான அஜித்தை காட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்று அஜித் அவரின் பெர்சனல் வேலையாக சென்னை விமான நிலையம் சென்றார், அங்கிருந்து எங்கோ போவதற்கு. அப்போது தான் இந்த வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. உடன் பயணித்த இரண்டு பயணிகள் அஜித் ரசிகர்கள் போல, அஜித்துடன் பயணிக்கிறோம் என்றால் போட்டோ எடுக்கணும் என்று ஆசையா தான் இருக்கும். முதலில் கேட்டிருப்பாங்க போல, அப்புறம் எடுத்துக்கலாம் என்று சொல்லிருப்பார் போல.
மறந்துட்டார் என்று நினைத்த அவங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மீண்டும் அவரே கூப்பிட்டு போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த couples ஓட திருமண நாளான இன்று அவங்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சி கிடைச்சிருக்கு. அந்த பொண்ணு பேசும்போதே கண் கலங்கிட்டாங்க. ஒரு ரசிகையின் பேன் கேர்ள் மொமெண்ட் சூப்பரா capture பண்ணிருக்காங்க.
Video:
Video of Fans meeting #AjithKumar ..❣️👌 #Thunivu pic.twitter.com/zlu2o6PzAo
— Laxmi Kanth (@iammoviebuff007) December 1, 2022