அஜித்தை ஹாலிவுட் ஹீரோன்னு சும்மாவா சொல்றாங்க.. ப்பா மனுஷன் தாடி எடுத்துட்டு தக தகன்னு மின்றாரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ajith latest photo trending

தல அஜித்தை அவருடைய ரசிகர்கள் புகழும் போதெல்லாம் அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை ஹாலிவுட் ஹீரோ தமிழ்நாட்டில் என்று தான் சொல்வாங்க. ஏனென்றால் மனுஷன் அவ்வளவு கலரு, அழகு, ஒரு swag இருக்கும் அவருகிட்ட. நடிகை குஷ்பூ அஜித்தை புகழும் போது அல்லது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லும் போது ‘மை ஜார்ஜ் கிளூனி’ என்று தான் சொல்வாங்க. அவர் வந்து ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர், அவரை போலவே அஜித் இருக்கிறார் என்று.

அஜித்துக்கு ப்ளஸ்ஸே அவருடைய கலர் தான். இந்த கலரா இருக்கிறவங்க சால்ட் & பெப்பர் கெட்டப் லுக்ல எப்போவுமே சூப்பரா இருப்பாங்க. அதனால் தான் அவரு அந்த லூக்கையே maintain பண்ணிக்கிறாரு. ஆனால் இயக்குனர்கள் தான் அவரை தாடியோடு காட்டி ஒரு rough லுக்லேயே வெச்சிருக்காங்க. கடைசியா இவர் லுக் சரியா யூஸ் பண்ணினது கெளதம் மேனன் தான். என்னை அறிந்தால் படத்தில் அவ்வளவு handsome ஆ இருப்பாரு.

Ajith latest photo trending

கடந்த ஒரு வருடமா துணிவு படத்திற்காக ஒரு கெட்டப்பில் அதாவது எப்போது மாதிரி இல்லாமல் கொஞ்சம் நீளமான தாடியுடன் தான் காட்சியளித்தார். ஏன் டூர் போகும்போது கூட இதையே maintain பண்ணினார். அதாவது இந்த வாரம் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அதாவது சாங்ஸ் ஷூட் முடிஞ்சவுடன் தாடியை நேற்று எடுத்துள்ளார். கல்யாண் மாஸ்டர் தான் பாட்டுக்கு கோரியோ பண்ணி கொடுத்துள்ளார். பாடும் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சொல்றாங்க.

மேலும் வாரிசு, துணிவு இரண்டு படத்தின் விளம்பரமும் இன்னும் சற்று தினங்களில் முழு வீச்சில் ஆரம்பித்துவிடும். ஏற்கனவே இணையத்தில் அடிச்சுட்டு சுத்துறாங்க ரசிகர்கள். இனி பொங்கல் வரைக்கும் சரவெடி தான். இவங்க அடிச்சுக்கிறத வெச்சு ஒரு குரூப் நல்லா சம்பாதிக்கப்போகுது.

Related Posts

View all