என்னோட sunshine நீங்க.. அஜித் புகைப்படத்தை போட்டு ரொமான்ஸ் செய்த ஷாலினி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தலா அஜித் இப்போ துணிவு படத்தின் மெகா ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாட ஜாலியா பாரின் ல ஊர் சுத்திட்டு இருக்காரு. ஒரு விஷயம் தான் புரியவில்லை விமானத்தில் எப்போ பேமிலி எல்லாம் போறாங்க என்று, இவர் போட்டோஸ் மட்டும் தான் ரிலீஸ் ஆகுது, ஷாலினி, குழந்தைகள் எல்லாம் முன்னாடியே போய்டுவாங்க போல.
சரி துணிவு படம் வெற்றி அடைஞ்சிருச்சு. நடிகர் வாழ்க்கையில் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் பொது அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகிட்டே இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம், ஆனால் அஜித் படத்தின் இயக்குனர் தான் இப்போது யார் என்ற பஞ்சாயத்து போயிட்டு இருக்கு. முன்னாடி 62வது படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து அவரை தூக்கியுள்ளது லைக்கா நிறுவனம், இதற்குமுன் லைக்கா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாக இருந்த படமும் கைவிடப்பட்டது, தற்போது அஜித் 62வது படமும். பாவம் விக்கி, அவருக்கு லைக்கா நிறுவனத்திற்கும் ஒத்துபோகலா போல, அதனால் தான் இப்படி ஆகியுள்ளது.
தற்போது அஜித் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பவர் மகிழ் திருமேனி, full ஸ்விங்ல கதை டிஸ்கஷன் எல்லாம் போயிட்டு இருக்கு. எப்போ வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். தற்போது இணையத்தில் ஷாலினி அஜித்தை எடுத்த புகைப்படம் ஒன்று வைரல் ஆகியுள்ளது. கணவன் மனைவி இருவருமே போட்டோ சூப்பரா எடுப்பாங்க போல. செம்ம அழகா இருக்கு போட்டோ.