அவர்கூட இப்படி செல்பி எடுக்கும் பாக்கியம் எல்லாம் வரம் தான்.. தல அஜித் எடுத்த செல்பி.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Ajith latest selfie photos viral

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் ஷூட்டிங் தற்போது பாங்காக்கில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு சுட செய்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு பாங்காக் சென்றதுக்கு காரணமே பைக் சேசிங் காட்சிகளை படம் பிடிக்கத்தான் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஷூட்டிங் முடிந்தது என்று தகவலும் நான்கு நாட்களுக்கு முன் வெளியானது. நாள் இன்னும் போய்ட்டு தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அமீர் மற்றும் பவனி ரெட்டி இருவரும் பாங்காக் ஷூட்டிங்கில் இணைத்திருக்கின்றனர் என்ற தகவல் வெளியானது, அதை உறுதி செய்யும் விதமாக இன்று அவங்க பதிவேற்றம் செஞ்ச செல்பி உறுதி செய்கிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் நடித்த சிபி இந்த படடிஹல் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக அவரும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பையும் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

தற்போது இணையதளம் முழுவது பவனி அப்டேட் செய்த செல்பி தான் வைரல். என்ன நீ மட்டும் தான் அப்டேட் செய்வியா நானும் பண்றேன் என்று சொல்லி சிபியும் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மூவருமே சிறிய ரோல் தான் செய்கின்றனர், ஆனால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வலிமை படத்தில் விட்ட பெயரை இந்த படத்தில் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று எச். வினோத் கடுமையாக உழைத்து வருகிறார்.

Related Posts

View all