இந்த ஸ்டில் பார்த்தவுடனே விஜய் ரசிகர்களே துணிவு படத்துக்கு தான் போவாங்க போல. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அஜித் சார் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது; இதைவிட வேறென்ன வேண்டும் ‘துணிவு’ பட நடிகர் ஜான் கொக்கென் வேற கூறுவது அஜித் ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தியள்ளது. ஜான் கொக்கன் யாரென்று கேக்காதீங்க மக்களே, அவர் தான் நம்ம சர்பட்டா பரம்பரை வில்லன் வேம்புலி. இந்த படத்தில் அவர் பாசிட்டிவ் கதாபாத்திரம் தான் பண்றார்.
இவ்வளவு நாள் வாரிசு பீவரில் இருந்தோம், அதை கொஞ்சம் கொஞ்சமாக துணிவு ஆக்கிரமிச்சுட்டு வருது. இன்று படத்தோட முக்கியமான ஸ்டில்ஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிருக்காங்க. அந்த ஸ்டில்கள் பார்த்தவுடனே அவ்வளவு பயங்கரமா expectation ரைஸ் ஆயிடுச்சு எல்லாருக்கும். தல அவ்வளவு ஸ்டைலா இருக்காரு, கண்டிப்பா துணிவு பெரிய சம்பவம் பண்ணும் போலயே.
படத்தில் மஞ்சு வாரீயர் அஜித்துக்கு pair இல்லையாம். சொல்லப்போனால் அஜித்துக்கு படத்தில் ஜோடியே இல்லை. ஆனால் அஜித் ஒரு gang உடைய தலைவன், பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம் வங்கிகளில் இருந்து. அந்த கூட்டத்தின் தலைவன், அந்த கூட்டத்தில் ஒருத்தி தான் மஞ்சு. அப்படியே மணி ஹெய்ஸ்ட் சீரியஸ் போலவே இருக்கிறது. அஜித் இவர்களை தேடி தேடி போய் டீம் சேர்த்தால் கண்டிப்பா அது மணி ஹெய்ஸ்ட் தான், அப்படி பண்ணமாட்டார் வினோத் என்று நம்புகிறோம்.
படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் எல்லாம் எதிர்பார்க்கலாம். சதுரங்க வேட்டை படம் போல படத்தில் பணத்தை பற்றி தரமான வசனங்களை எதிர்பார்க்கலாம். சமீபத்தில் வினோத் கொடுத்த காணொளியில் பிடித்ததே “விஜய் - அஜித் இருவரில் யார் ஜெயிப்பாங்க என்பதை debate செய்து மக்களின் முக்கியமான பிரச்சனைகளை மறக்க செஞ்சாராதீங்க.”