அஜித்தோட மேனேஜர் டா நானு.. முரட்டு தனமாக நடந்துகொண்ட விஜய் தேவரகொண்டா உதவியாளர். வீடியோ வைரல்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் மச் awaited படம்ன்னு சொல்லலாம் இந்த லைகர் படம். இதுவரை அவரின் எந்த படத்துக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உருவாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இது தான் விஜயின் முதல் பான் இந்தியா படம் வேற.
அதனால் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் சென்று படத்தை வேற லெவெலில் ப்ரொமோட் செய்து வருகிறார். பெரிய ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் இவர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார் படத்தை விளம்பர படுத்த. அந்த நிகழ்ச்சியை நம்ம DD தான் ஹோஸ்ட் செய்தார். விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர், போட்டோ எடுக்க அவ்வளவு ஆர்வம் அவரோடு.
ஆனால் விஜயின் உதவியாளர் ரசிகர்கள், பிரபலம் என்று பாராமல் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். முதலில் selfie எடுத்த ரசிகனை அப்படியே இழுத்து தள்ளினார் அப்போது DD கையில் பலமாக அடிபட்டது.
பின்னர் மேடைக்கு வந்த பிரபலங்களுடனும் அதேபோல் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடனும் அப்படியே நடந்து கொண்டார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Viral Video: