ச்ச என்ன மனுஷன் யா.. பொறாமையோ வெறுப்போ வேண்டாம். ரசிகர்களுக்கு மெசேஜ் கொடுத்த அஜித். முழு விவரம்.
அஜித் நடிக்கும் துணிவு படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் - “பாடல்கள் மாஸா இருக்கும்.அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரு ரசிகராக நான் என்ன செய்யவேண்டும் என நினைத்தேனோ அதை செய்திருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். இதனால் எப்போடா அடுத்த வாரம் வரும் பாடல் வெளியீடுவாங்க என்று காத்துக்கிடக்கின்றனர். அதுவும் செம்ம டான்ஸ் இசை என்றும் குறுபிட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் படம் வேற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. அதனால் ட்விட்டரில் தினம் தினம் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கிடையே வாக்குவாதம் தான் யார் பெரிய ஆள் என்று. வாரிசு படத்தின் ப்ரோமோஷன்ஸ் இப்போ ஸ்டார்ட் ஆயிடுச்சு முதல் சிங்கிள் மூலமா, படத்தின் இறுதி கட்ட வேலைகள் இரண்டு படத்துக்கும் போயிட்டு இருக்கு. வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஷூட் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, துணிவு படத்தை பொறுத்தவரை இன்னும் ஒருபாடல் மட்டும் மிச்சம் இருக்கிறது.
தற்போது இன்று காலை அஜித் managerக்கு ஒரு மெசேஜ் அனுப்பிருப்பார் போல. அந்த ஒரு மோட்டிவேஷன் மெசேஜ். எப்படி நம்முடைய அப்பா அவருடைய நண்பர்களுக்கு தினமும் அனுப்புவாங்க அந்த மாதிரி. அதை அவரோட மேனேஜர் சுரேஷ் சந்திரா இணையத்தில் பதிவிட்டிருக்காரு. அந்த மெசேஜ் தான் ட்ரெண்டிங்.
அந்த மெசேஜ்-ன் தமிழாக்கம்:
உங்களை உற்சாகப்படுத்தும் நபர்களுடன் உங்களைச் சுற்றி வையுங்கள், மேலும் சிறப்பாக இருங்கள். நாடகமோ எதிர்மறையோ இல்லை. உயர்ந்த இலக்குகள் மற்றும் அதிக உந்துதல். நல்ல நேரம் மற்றும் நேர்மறை ஆற்றல். பொறாமையோ வெறுப்போ இல்லை. ஒருவருக்கொருவர் முழுமையான சிறந்ததை வெளியே கொண்டு வருவது.
இது தான் அஜித் ரசிகர்களுக்கு, அஜித் இன்று கொடுத்த மோட்டிவேஷன்.
Tweet:
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022