பைக்கில் சீறிய அஜித்.. தல நீங்க ஒரு ரேசர்ன்னு நிரூபிச்சுடீங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Ajith off road riding photos viral

தல அஜித் எவ்வளவு பெரிய பைக் சார் racer என்பது அனைவர்க்கும் தெரியும். பைக்/சார் என்று வந்துவிட்டால் எவ்வளவு கஷ்டமான ஸ்டண்ட் ஆக இருந்தாலும் அவரே தான் அதை பண்ணுவார். இது எல்லாம் ஆரம்பித்தது பிள்ளை படம் மூலம். அப்போது ஒரு கார் சேசிங் காட்சி ஒன்றை இயக்குனர் வைத்திருப்பார். தல அஜித் ரசிகர்கள் நன்றி சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் விஷ்ணுவர்தன்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் அவர் அவர் நடிக்கும் படங்களில் பைக் அல்லது கார் சேசிங் காட்சியை வைத்துவிடுகிறார். கடைசி வெளியான சிவா படங்களை தவிர அனைத்து படங்களிலும் கார்/பைக் ஸ்டாண்ட்ஸ் இருக்கும். மேலும் சிவாவின் விவேகம் படத்தில் கூட பைக் ஸ்டண்ட்ஸ் வெச்சுருப்பார். தற்போது நடித்து வரும் துணிவு படத்திலும் ஸ்டாண்ட் காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த காட்சிகள் தான் தற்போது முடிந்த பேங்காக் schedule-ல் நடந்து முடிந்ததாக செய்திகள் வருகின்றன. மேலும் சமீபத்தில் கொஞ்ச நாட்களாகவே பைக் ட்ரிப்பில் இருக்கும் அஜித், தாய்லாந்து நாட்டில் இந்த படத்திற்காக பைக் ரைடிங் பயிற்சி எடுத்தபோது எடுத்த ஆப் ரோடு போட்டோக்களை பகிர்ந்துள்ளார் படக்குழுவினர். எல்லாமே புகைப்படங்களும் சும்மா மிரட்டுகிறது. மனுஷன் எப்படி தான் இந்த வயதிலும் இப்படி ஓட்றாருன்னு தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து இதையே பண்ணிக்கொண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். அதனால் கொஞ்சம் கேப் விடலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது.

Latest Photos:

Related Posts

View all