மனுஷன் புடிச்சதை பண்றாரு. 62வது படத்தை முடித்து விட்டு 7 கண்டங்களை பைக்கில் சுற்றும் அஜித். முழு விவரம்.
தல அஜித் ஒரு பெரிய பைக்/கார் பிரியர். இவரைப்போல வேற யாராவது இப்படி சினிமாக்காரர்கள் அடிக்ட் ஆகியிருக்காங்களா என்று எடுத்துப்பார்த்தால் யாரும் இல்லை. கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் பைக் பிரியர் என்றால் தோனியை சொல்லலாம். ஏனென்றால், அவர் பழைய பைக் முதல் புது பைக் வரை ஒரு குடோன் போல ஒன்றில் சேர்த்து வைத்திருக்கிறார். அவருக்கு இப்படி அஜித்தை போல பைக் ரைடிங் போறது எல்லாம் புடிக்காது போல, விந்தஜீ வண்டிகளை கலெக்ட் செய்து சேர்த்து வைத்துக்கொள்வார். அதுமட்டுமில்லாமல் அஜித் தமிழ்நாட்டில் மட்டுமே ஸ்டார், அதனால் வெளியில் போனால் நிறைய மனிதர்களால் அடையாளம் காண முடியாது, ஆனால் தோனி இன்டர்நேஷனல் ஸ்டார், எங்கு போனாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வர்.
மேலும் தற்போது அஜித் அவருடைய பேட்ச் ஒர்க் அனைத்தும் தாய்லாந்தில் முடித்துவிட்டு இன்று தாயகம் திரும்பியுள்ளார். நேற்று படத்தின் பேட்ச் ஒர்க்ஸ் சென்னையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் வருவார் என்று கூடியிருந்த கூட்டத்திற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில் அவர் இன்று தான் இந்தியாவே வந்துள்ளார். இந்த படம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடு, அதற்குப்பின் பொங்கல் ரிலீசுக்கு ஆயத்தம் ஆகிறது இந்த படம்.
ஏற்கனவே வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் அவதால், இந்த படம் பிப்ரவரி மாதம் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நாங்களும் பொங்களுக்கே வருகிறோம் என்று அவரும் வருகிறார். கண்டிப்பாக திரையரங்குகளில் சம்பவம் இருக்கிறது. multiplex-ல் எல்லாம் அடித்து கொள்ளாமல் இருந்தால் நல்லது. ஆனால் இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் விஜய் படம் ஒரு நாள் முன்னாடி வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது அதாவது புதன்கிழமை, அஜித் படம் வியாழன் அன்று வெளியாகிறது.
தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவனுடன் முடித்துவிட்டு 18 மாதம் பிரேக் எடுக்கிறார். அதாவது 7 கண்டங்களை பைக்கில் ட்ராவல் செய்யவுள்ளார். அதனால் 63வது படம் எல்லாம் வர்ற நீண்ட நாட்கள் ஆகும். தயாராகிக்கோங்க மக்களே.