இவர் தான் ராம்சரணுக்கு பிடித்த தமிழ் நடிகராம்.. அவங்க மனைவி சொல்லிருக்காங்க.. எல்லாருக்கும் அவரை தான் பிடிக்குது.

Ajith ramcharan fanboy moment

RRR படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் நடிகர் ராம்சரண் மின்னினார். இவரை தவிர வேறு எந்த நடிகர் அந்த கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும் இவர் அளவுக்கு perform பண்ணிருப்பார்களா என்று எண்ணி பார்த்தால் வாய்ப்பே இல்லை என்பதே நம் நினைவுக்கு வரும். அந்த அளவு மாஸ் காட்டிருப்பாரு.

இந்த படத்தை OTTயில் ரிலீஸ் ஆன பின்பு பல வெளிநாட்டு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவரின் நடிப்புக்கு கண்டிப்பாக ஆஸ்க்கார் தரவேண்டும் என்று கூட நிறைய பேர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று அனுப்பிய ஆஸ்க்கார் லிஸ்டில் இந்தியா சார்பாக போட்டியிடும் படத்தில் RRR படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith ramcharan fanboy moment

சமீபத்தில் இவருடைய மனைவியுடன் நடந்த உரையாடலில். யார் ராம்சரனுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்று கேட்கும்போது, அவருக்கு அஜித்தை தான் மிகவும் பிடிக்கும், அவரின் படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார், எனக்கு ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று வேற AK 61 படத்தின் முதல் லுக் ரிலீஸ் ஆவதாக நிறைய தகவல்கள் வெளியாயின. அஜித் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

Related Posts

View all