கொள்ளை அழகு. ரெண்டு பேரும் எவ்வளவு அழகா சிரிக்குறாங்க. அஜித் - ஷாலினி ரொமான்டிக் போட்டோஸ் வைரல்.
தீபாவளி என்று வந்துவிட்டாலே கொண்டாட்டம் தான். ஏழை எளிய மக்களிடமிருந்து பெரிய பணக்காரர்கள் வரை அவங்க குடும்பத்தோடு ஒரு நாள் செம்ம ஜாலியாக எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை மறந்து கொண்டாடும் ஒரு பண்டிகை. எவ்வளவு பிஸியான ஆட்களோ இருந்தாலும் குடும்பத்துடன் செலவழிக்கும் அந்த ஒரு நாளுக்கு ஈடாகாது. தற்போது வெளிவந்த அஜித் - ஷாலினியின் புகைப்படம் அதை உணர்த்துகிறது.
அஜித்தை எல்லாருமே ரொம்ப பிரைவேட் person என்று கூறுவர். அவர் எப்போதுமே வெளியில் பெரிய அளவு வரமாட்டார் என்று. ஆனால் பண்டிகை என்றால் ஜாலியாக குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். எங்ககுக்கு தெரிந்தவரை கடைசி 20 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அஜித்தின் அதிக ஆப்லைன் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. திரைப்படம் வேண்டாம் புகைப்படம் போதும் அதையே வேற லெவெலில் கொண்டாடுவோம் என்று சொல்லுகிற ரசிகர் கூட்டம் இவருக்கு தான்.
ஷாலினியின் தம்பி ரிஷி இந்த புகைப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அதில் அஜித் ஷாலினி இருவரும் மிகவும் சநதோஷமாக இருப்பது தெரிகிறது, அதுவும் அவர்களின் அந்த சிரிப்பு வேற லெவல். அதுமட்டுமில்லாமல் அவர் குண்டாக இருப்பதாக கேலி கிண்டல்களை முறியடிக்கும் வண்ணம் ரொம்ப பிட்டாக இருக்கிறார். அடுத்த அப்படத்துக்கு ரெடி ஆகிட்டு இருப்பார் போல. விக்னேஷ் சிவன் எப்படியும் அவ்வளவு சீரியஸா படம் எடுக்கமாட்டாரு. எதோ surprise காத்திருக்கு.
துணிவு படத்தின் டப்பிங் படுவேகமாக நடந்து வருகிறது. படத்தை எப்படியாவது பொங்கலுக்கு ரிலீஸ் செய்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படத்தை வேலை நடந்து வருகிறது. ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என்று தான் சொல்லப்பட்டது. பார்ப்போம் அடுத்த வாரங்களில் நிறைய அப்டேட்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.