ரசிகரை முறைத்த தல.. ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோங்க அஜித்து.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ajith stares at the fan video viral

அஜித் தன்னோட 61வது படமான துணிவு ஷூட்டிங் லாஸ்ட் schedule முடிக்க பாங்காக் கிளம்பிட்டாரு. அந்த புகைப்படங்க, விடியோக்கள் ரிலீஸ் ஆகின. அதெல்லாம் இணையத்தில் இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்ட வீடியோ மட்டும் விஜய் ரசிகர்கள் கையில் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறது. எவ்வளவு பெரிய பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும், ஆனால் இவர்கள் தினம் தினம் போடும் ரசிக சண்டைகள் மட்டும் வரவே வராது.

அந்த வீடியோ என்னவென்றால் பாங்காக் விமானத்தை பிடிக்க போர்டிங்கில் நின்று கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் அஜித்திடம் நெருங்க, அவரை கடுமையாக முறைத்துப்பார்த்து அங்கிருந்து போ என்று ஒரு அதட்டல் போல இருந்தது. அந்த வீடியோ வைரல் ஆகி தான் இப்போது விஜய் ரசிகர்களுக்கு கன்டென்ட் ஆகா மாறியுள்ளது.

மேலும், ரசிகர்களுக்கு முதலில் மரியாதை கொடுக்க கத்துக்கோங்க என்றும், விஜய் எப்படி ரசிகர்களுக்கு மரியாதையை கொடுக்கிறார் என்றும் பல விடீயோக்களை இணையதளத்தில் தெறிக்கவிட்டுள்ளனர்.

ஆனால் எப்போதுமே ஒருவர் எங்கு சென்றாலும் அவரை சுற்றி கேமராக்கள் இருந்தால் அவருக்கு கொஞ்சம் uncomfortable ஆக இருக்கும். அதுவும் அஜித், விஜய் போன்று பெரிய ரசிகர் படையை கொண்ட நடிகர்கள் இதுபோன்று பிரச்சனைகள் மாட்டிக்கொள்வது சகஜம் அஜித்துக்கும் இது புதுசு இல்லை. தேர்தலின் பொழுது ஓட்டு போட வந்த ரசிகர் செல்பி எடுக்க நினைத்தபோது செல்போனை புடுங்கினார்.

ஆனால் அஜித் ரசிகர்கள் இந்த வீடீயோவை பார்த்து ஆரம்பம் படம் அசோக் குமார் நியாபகம் தான் வருகிறது ஒரு லுக் விட்டாரு பாருங்க என்று பயர் விட்டு வருகின்றனர்.

Video:

Related Posts

View all