நம்ம ஆள் பைக் ரைடு போன போது.. பாதி படத்துல அஜித்தா நடிச்சது இவரு தானா? துணிவு லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அஜித் நடிக்கும் துணிவு படத்தின் அப்டடேஸ் தினம் தினம் வந்துட்டே இருக்கு. எப்போடா அதிகாரபூர்வமா எதாவது அப்டேட் வரும் என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்னைக்கு வருது அப்டேட். தற்போது இணையத்தில் நேற்று ரிலீசான புகைப்படத்தால் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. துணிவு படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் நடந்த நேரத்தில் அஜித் பைக் ride தான் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முக்கியமான பேட்ச் ஒர்க்ஸ் எல்லாம் நடந்து வந்தது, நேற்று வெளியான புகைப்படத்தால் அது உறுதியாகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அஜித் உயரம் அவரை போலவே தாடிவைத்துக்கொண்டு ஒருவர். இன்னும் கொஞ்சம் டீடைலா நோக்கினால், அவர் விரலில் அணிந்திருக்கும் மோதிரம். அஜித் மட்டும் தான் அப்படி அணிவார். இதையெல்லாம் வைத்து அஜித் டூப் போட்டு நடித்துள்ளார் என்று கலாய்த்து வருகின்றனர்.
இது எல்லாம் ஒருபுறம் இருக்க, அவர் அஜித் போலவே டப் செய்து ரிலீசான ரீல்ஸ் எல்லாம் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அடடே உண்மையாவே இவரு அஜித் மாதிரி தான் ஒரு சைடு பார்த்தா இருக்காரு என்று பலர் கருது தெரிவித்து வருகின்றனர். எப்படியும் எண்டு கிரேடிட்ஸ் போடுவாங்க, அப்போ தெரிந்துவிடும் அவர் உண்மையாவே அஜித்தின் டூப்பா இல்லையா என்று, சரி இப்போ படத்துக்கு வருவோம் இன்று மிரட்டலா ஒரு போஸ்டர் வெளியாக இருக்கிறது.
இனி இரண்டு மாதத்திற்கு இப்படி தான் இருக்கப்போகுது. எந்த போட்டோ ரிலீஸ் ஆனாலும் அதை வைத்து ரசிகர்கள் அவங்க அவங்க own கதைகளை ரெடி பண்ணி ட்ரெண்ட் பண்ணி விட்ருவாங்க. எது உண்மை எது பொய் என்று ஆராயவே நேரம் போய்டும்.