சீனுக்கு சீனுக்கு கோத்*, *த்தா என்று திட்டிக்குவாங்க போல.. துணிவு படத்தின் சென்சார் ரிப்போர்ட்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
அஜித் நடிக்கும் துணிவு படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் செம்ம வைரல், எப்போடா கிலிம்ப்ஸ் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மிரட்டலான ட்ரைலர் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி படுதீர்க்காரு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். அஜித் ரசிகர்கள் இதற்கு முன்னர் இவரை திட்டாத திட்டே கிடையாது.
எப்போதுமே ஒழுங்கா ப்ரோமோஷன் பண்றது இல்லை என்று இவர் மீது கடுமையான விமர்சனம், ஆனால் வாரிசு படத்தை விட பயங்கரமா ப்ரோமோஷன் பண்றதே துணிவு டீம் தான். அஜித் நல்ல படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்று சொன்னதும் ப்ரோமோஷன் பண்ணவே மாட்டாங்க என்று நினைத்தோம் ஆனால் தயாரிப்பு நிறுவனம் கொஞ்சம் சூட்டிப்பு ஆகி பயங்கரமா பண்றாங்க.
சில தினங்களுக்கு முன்பு படம் சென்சார் ஆகிவிட்டது என்ற அறிவிப்பு வந்தது. அதைவிட மகிழ்ச்சியான விஷயம் அவர்களுக்கு என்னவென்றால் படத்தின் நீளம் வெறும் 2மணி நேரம் 26 நிமிடங்கள் தான். இதை ஏன் சொல்கிறோம் என்றால் திரைக்கதை நன்றாக இல்லை என்றால் அதுவும் படத்தின் நீளமும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக அந்த படம் பிளாப் தான்.
ஆனால் திரைக்கதை நன்றாக இருந்துவிட்டால் 3 மணி நேரம் படம் கூட போவது தெரியாமல் போகும். சிவாஜி, துப்பாக்கி போன்ற படங்கள் எல்லாம் அதற்கு சாட்சி. இந்த துணிவு படகில் பல காதுகளை வெட்டி எடுத்துள்ளனர். அதில் நிறைய கேட்ட வார்த்தைகள். அந்த லிஸ்டை மேலே அப்டேட் செய்துள்ளோம். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க.