போவியா நான் தான் துணிவு படத்தோட ரெண்டாவது ஹீரோ.. வெளிவந்த மாஸ் அப்டேட். போட்டோஸ் வைர.
அஜித் நடிக்கும் துணிவு படத்தின் உப்டடேஸ் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கிறது. எப்போடா எப்போடா என்று காத்துக்கிடந்த ரசிகர்கள் அடுத்த வாரம் முதல வைப் பண்ண போறாங்க. அனிருத் குரலில் சில்லா சில்லா அப்டின்னு ஒரு பாட்டு உருவாகியிருக்க, அந்த பாட்டின் சுட தான் தற்போது போயிடு இருக்கு. இந்த படத்தின் முதல் சிங்கிளை வைத்து தான் இந்த படத்துக்கு ஒரு ஹைப் உருவாகும்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ஒரு படத்தின் பாடல் தற்போது வெளியாகி தமிழ்நாடே அதுக்கு வைப் பண்ணிட்டு இருக்கு. ரஞ்சிதமே பாட்டு வாரிசு படத்துல இருந்து, பட்டிதொட்டி எல்லாம் பட்டாசா ஒலிச்சுட்டு இருக்கு. அதுக்கு ஈடு கொடுக்கணும் இல்லையா. அந்த பாடலை விட பெரிய விருந்தா அஜித் ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறார் ஜிப்ரான். அனிருத் குரல் என்பதால் ஏற்கனவே இந்த பாடலுக்கு செம்ம ஹைப் ஏற்கனவே ஏறிடுச்சு.
சர்பட்டா படத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைப்பற்றி அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். படத்தில் அஜித் ஹீரோ என்றால், இவர் செகண்ட் ஹீரோவாம். அப்படியென்றால் இவர் போலீஸ் அதிகாரியாக வர்ற நிறைய வாய்ப்பு இருக்கு. கட்டு மஸ்தான உடம்பை வைத்திருக்கும் இவருக்கு செம்ம meaty ரோல், சர்பட்டா, KGF படத்துக்கு பின்.
தற்போது அந்த பாடல் ஷூட்டிங்-ல் என்ன surprise என்றால் அஜித்தும் கலந்துகொண்டிருக்கிறார். படத்தில் ஒரு குட்டி ரோல் செய்யும் சிபியும் அந்த பாடலில் நடிக்க இருக்கிறார். சில்லா சில்லா என்று தொடங்கும் அந்த பாடல் செம்ம குத்து பாட்டு என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் படத்தில் நடித்த பசங்களும் இருக்காங்க, மங்காத்தா படத்தில் வரும் ‘மச்சி ஓபன் தி பாட்டில்’ பாடல் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.