விளம்பரம் வேண்டான்னு சொல்வாராம்.. 365 நாளும் போட்டோ ரிலீஸ் பண்ணுவாராம். அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை. முழு விவரம்.
அஜித்தின் “துணிவு” படம் ரெட் ஜெயண்ட் movies உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு காரணம் அவர்கள் படம் ரிலீஸ் செய்வதாக இருந்தால் சூப்பரா ப்ரோமோஷன் பண்ணுவாங்க என்று. எப்படியும் இந்த தடவை அஜித்தை அழைத்து வந்து பெரிய நிகழ்ச்சி நடத்துவார்கள் என்றெல்லாம் இணையத்தில் ரசிகர்களால் பேசப்பட்டது.
அவர்களின் சந்தோசம் மிகநீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதை பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், ரொம்ப எதிர்பார்த்து விடுவாங்க இதை உடனே கட் செய்யவேண்டும் என்று எண்ணி அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா ஒரு ட்வீட் ஒன்று போட்டார். அவர் போட்டது,
“A good film is promotion by itself!! - unconditional love! Ajith”
இதற்கு அர்த்தம் நல்ல படத்துக்கு ப்ரோமோஷன் தேவை இல்லை. அந்த படத்துக்கு இதுவே ப்ரோமோஷன் என்று. இது பெரிய சர்ச்சையாகி வெடித்துள்ளது. பல ரசிகர்கள் இதற்கு எதிர்க்கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் எழுப்பிய கருத்து மிகவும் நியாயமானது. அவர் என்ன சொன்னார் என்றால், இது மாதிரி ஹீரோக்களின் மனநிலை தான் கோலிவுட்டை பின்னுக்கு தள்ளியுள்ளது. நல்லா படத்தை ப்ரொமோட் செய்ததன் காரணமாக 1000 கோடி வசூலை அள்ளிய டோலிவுட் சவுத்தில் முன்னணி சினிமா இண்டஸ்ட்ரியா விளங்குகிறது என்று கூறியுள்ளனர். இந்த வாதத்தை இல்லை என்று மறுக்கவே முடியாது.
நேற்று துணிவு படத்தின் டப்பிங் புகைப்படங்கள் வெளியாகின. இதுபோல எல்லாம் இதற்கு முன்னர் நடந்ததே இல்லை. இந்த புகைப்படங்கள் ரிலீஸ் ஆனவுடன் ப்ளூ சட்டை மாறன் கூறியது,
“ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா?
இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், மகிழ்வார்களே.”
இந்த கருத்து தற்போது சர்ச்சை. இதையெல்லாம் பற்றி தயாரிப்பாளரே யோசிக்காத பொது நாம் எதற்கு யோசிக்கவேண்டும். பணம் போடுபவர் அவர், கண்டிப்பா அஜித் வரமாட்டாரென்று தெரிந்து தான் தயாரிக்கிறார். அதில் நாம் மூக்கை நுழைப்பது சரியாக இருக்காது.
ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா?
— Blue Sattai Maran (@tamiltalkies) November 4, 2022
இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள், ் மகிழ்வார்களே. pic.twitter.com/ggxvtk4uBc