வெள்ளை முடி யார் வெச்சிருந்தாலும் அஜித் என்று முடிவு பண்ணிடுவாங்க போல. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
![Ajith thunivu latest update](/images/2022/11/12/ajith-thunivu-latest-update-1-.jpg)
அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் அவதால் படத்தின் ப்ரோமோஷன் ஒர்க்ஸ் பயங்கர வேகமாக நடந்து வருகிறது. போன வரம் அஜித்தை வைத்து சாங் சுட எல்லாம் ப்ரோமோக்ககரேல்ஸ் செய்தனர். படம் ரொம்ப நல்லா வந்திருக்கும் போல, அதனால் தான் இதுவரை இல்லாத அஜித் படம் போல், இந்த படத்துக்கு ப்ரோமோஷன் எல்லாம் பயங்கரமாக தயாராகி வருகிறது. படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’. அனிருத் குரலில் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது.
எப்படியும் அஜித் ப்ரோமோஷன்க்கு வரமாட்டார். ஆனால் ஒரு பாடவைத்து சுட செய்துகொள்கிறோம் என்று அழைத்து ஒரு பாடலை சுட செய்துள்ளனர். தளபதி விஜயின் வாரிசும் பொங்கலுக்கு வருகிறது. வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரஞ்சிதமே சரியான ஹிட்டு. ரிலீஸ் ஆகி ஒரு வரம் கூட ஆகவில்லை 50 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி வேகமாக நடந்து வருகிறது. அதனால் இந்த படக்குழுவினருக்கு பிரஷர். எப்படியாவது அதை பீட் செய்ய வேண்டும் என்று.
![Ajith thunivu latest update](/images/2022/11/12/ajith-thunivu-latest-update-2-.jpg)
தற்போது அஜித்தின் புகைப்படம் போல ஒரு படம் இணையத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அது பைக் பக்கத்தில் நின்று, பின்னாடி கண்னுடன் அஜித் போஸ் செய்வது போல. இதை பார்த்தவுடன் அஜித் ரசிகர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவேமுடியவில்லை. ஆனால் அது அஜித் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், முதல் தடவை பார்த்தால் அது அஜித் போல தான் தெரிந்தது. இப்படி ஒரு ஸ்டில் எல்லாம் படத்தில் இருந்திருந்தால் அது வேற மாதிரி இருந்திருக்கும். வாரிசு எல்லாம் அடிச்சு நொறுக்கிருக்கும் போல என்று அஜித் ரசிகர்கள் கமெண்டுகள் பறக்க விட்டனர்.
கொஞ்ச நேரத்திற்கு பின்பு கண்டுபிடித்துவிட்டார்கள் அது அஜித் இல்லையென்று. அந்த ஸ்டில் எதோ ஜாப்பனீஸ், கொரியன் படங்களில் இருந்து எடுக்கப்பட்டது போல. அஜித் ரசிகர்களின் சந்தோசம் கொஞ்ச நேரமே நீடித்தது பாவம். ஆனால் துணிவு படம் இந்த போஸ்டர் மூடில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் கதாபாத்திரம் தான் ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு.