அரசியல் பேசணும்னா அதைக் களத்துக்கு போய் பேசனும். சினிமாவில் பேசமாட்டேன். அஜித் அதிரடி. முழு விவரம்.
அரசியல் பேசணும்னா அதை களத்துக்குப் போய் பேசணும்னு நினைக்கிறவர் அஜித்குமார். சினிமாவை அரசியலுக்கான தளமா பயன்படுத்துவதில் அவருக்கு விருப்பமே கிடையாது. அரசியல் தலைவர்களை மறைமுகமா சாடுவதும் அவருக்கு பிடிக்காது. துணிவு படத்தை ஒரு ஜானர்ல சுருக்க முடியாது இது மல்டி ஜானர் படம் சுருக்கமா சொல்லனும்னா இது அயோக்கியர்களின் ஆட்டம் என்று இயக்குனர் எச்.வினோத் கூறியுள்ள பேட்டி வைரல்.
“அரசியல் பேசணும்னா அதை களத்துக்குப் போய் பேசணும்” என்று கூறியுள்ள வசனம் தான் இணையத்தில் வைரல். காரணம் விஜய் தாக்கப்பட்டாரா என்று அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். விஜய் தான் மேடை கிடைத்தால் அரசியல்வாதிகளை மறைமுகமா தங்கமாக ரோஸ்ட் பண்ணி விட்ருவாரு. இதனால் இவர் பேசும் பேச்சு அனைத்தும் ஒரு வாரம் செய்தி சேனல்களில் debate ஆகும்.
மேலும் அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி என்னவென்றால், சில்லா சில்லா பட்டோட அப்டேட் நேற்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பாடல் அனிருத் பாடியிருப்பதால் இன்னொரு ஆளுமா டோலுமாவா கூட இருக்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். மேலும் அவர்களின் objective என்னவென்றால் youtube-ல் விஜய் ரசிகர்கள் செய்த சாதனையை முறியடிக்கவேண்டும் என்பதே. அதனால் அன்னைக்கு ரெக்கார்டு வைக்க கூட வாய்ப்பிருக்கு.
நாட்கள் நெருங்க நெருங்க எப்போடா படத்தின் ட்ரைலர் வரும் என்று இரண்டு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். ஏற்கனவே வாரிசு படத்துக்கு பெரிய லெவல் ப்ரோமோஷன் கிடைத்துவிட்டது. இரண்டு பாடல்களும் செம்ம ஹிட். தமிழ்நாடு எங்கும் பெரிய பேனர் முனை திரையரங்குகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படமும் ஒரே தேதியில் வேற ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. காத்திருப்போம்.