காத்திருந்த அஜித் ரசிகை. 'இருங்க நான் வரேன்..' என்று போட்டோ எடுத்த அஜித். தல தல தான். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ajith thunivu video viral airport

அஜித் தற்போது துணிவு படத்தின் போஸ்ட் production வேலைகளில் பிசியாக இருக்கிறார். படம் நல்லா வந்திருக்கு என்று inside ரிப்போர்ட்ஸ் சொல்லுகிறது என்று கருத்து பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் துணிவு பொங்கல் என்று கூறி இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த படம் தான் யார் தமிழ் சினிமால செம்ம கெத்து என்று கட்டப்போகும் படம். விஜய், அஜித் ரசிகர்கள் இருவருக்குமே ரொம்ப பெர்சனல்.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்வதால் கண்டிப்பாக பெரிய ஸ்டேடியம் புக் பண்ணி அஜித்தை வரவழைத்து பெரிய விழா பண்ணலாம் என்று பேச்சு அடிபட்டு வந்தது. அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். அஜித் வந்தால் அவ்வளவு தான் கோடிக்கணக்கான மக்கள்கூடிவிடுவார் என்று ஒரே கூத்து. இது எப்படியோ அஜித் PRO சுரேஷ் சந்திரா காதுக்கு செல்ல, உடனே அறிக்கை விட்டுள்ளார்.

Ajith thunivu video viral airport

‘நல்ல படத்துக்கு அந்த படமே தான் ப்ரோமோஷன்’ என்று. இதிலிருந்தே தெரிந்து விட்டது அஜித் எவ்வளவு பெரிய நிறுவனம் தயாரித்தாலும் அந்த படத்துக்கு ப்ரோமோஷன் என்ற ஒன்று எப்போதும் இருக்காது என்று. அஜித் அவருடைய கொள்கையை சரியாக கடைபிடித்து வருகிறார். அதனால் யாருக்காகவும் அதை விட்டு கொடுக்கமாட்டார். அஹித் ரசிகர்களுக்கு கனவு கனவாகவே போய்விட்டது.

தற்போது அவர்களை குஷி படுத்தும் விதமாக அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைராலஜி வருகிறது. ஏர்போர்ட்டில் எடுத்த விடியோவா என்று தெரியவில்லை. அங்கு வயதான மாற்றுதிறனாளி மக்கள் நிறைய பேர் இருந்தனர். பொறுமையாக ஒவ்வொருவராக புகைப்படம் கொடுத்த வீடியோ. அதனால் தான் அவரை தங்கம் என்று சொல்கிறார்கள்.

Video:

Related Posts

View all