அஜித் கூட கூட 62வது படத்தில் நடிக்கப்போறது இந்த நடிகையா? செட் ஆகுமா ரெண்டு பேருக்கும். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தல அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த படத்தில் ஏற்கனவே கவின்,அரவிந்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அசினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கவின் பயங்கரமான அஜித் பேன் என்பதால் அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். அரவிந்த் ஸ்வாமி வேற இருக்காரு, டெட்லி காம்போ.
தற்போது அஜித்துடன் ஜோடி யார் என்பது தான் கேள்வியே. அஜித்துக்கு கடைசி மூன்று படங்களில் பெரிதாக பேர் என்று யாருமில்லை, பாடல்கள் இல்லை, ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. ஆனால் விக்னேஷ் எடுக்கும் படங்களில் இது எல்லாம் தான் சிறப்பம்சமாக இருக்கும். இது இல்லாமல் அஜித் வயதுக்கு ஏற்றது போல் படம் எடுப்பாரா இல்லை அஜித்தை கன்வின்ஸ் செய்து விடுவாரா என்பதில் surprise.
இதுவரை விக்னேஷ் எடுத்தது போல இந்த படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் இது அஜித் படம். இது என்ன மாதிரி படமாக இருக்கும் என்பதிலேயே அஜித் ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர். எப்போவும் போல கன், போலீஸ் என்று இருப்பாரா இல்லை ஜாலி லவ்வர் பாயாக இருப்பாரா என்று தெரியவில்லை. எப்படியும் வித்தியாசமான அஜித்தை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
தற்போது சினிமா வட்டாரங்களில் இருக்கும் buzz என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகியாக அப்ரோச் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தான். ஒரு சிலர் நயன்தாரா தான் கதாநாயகி என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு சிலர் கீர்த்தி நடிக்க ஓகே சொல்லிட்டாங்க என்ற பேச்சும் பரவி வருகிறது. கொஞ்சநாள் முன்பு ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி என்று சொல்லிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.